பரப்புரைப் பயணத் திட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 17, 2023

பரப்புரைப் பயணத் திட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்

கூட்டத்தின் மொத்த அளவு: 2 மணி 30 நிமிடங்கள்.

வரவேற்புரை, தலைமை, தோழமைக் கட்சித் தலைவர்கள் உரை அனைத்தும் - 1 மணி 15 நிமிடங்கள்

அறிவிக்கப்பட்ட கழகச் சொற்பொழிவாளர்கள் - 30 நிமிடங்கள்

தமிழர் தலைவர் உரை - 30 - 35 நிமிடங்கள்

இணைப்புரை, நன்றியுரை, மேடை ஒருங்கிணைப்பு - 5 நிமிடங்கள்

முதல் கூட்டம் 5 மணிக்கும், இரண்டாவது கூட்டம் 6:30 மணிக்கும் தொடங்கப்பட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் இருப்பின் இதற்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும்.

தொடர் பயணம் என்பதால் நேர நெருக்கடியைத் தவிர்க்க, நடுவில் வரவேற்பு என்று நிறுத்துவதையும், ஊர்வலமாக அழைத்துச் செல்வதையும் தவிர்த்து, நேரே கூட்டத்துக்குத் தமிழர் தலைவர் செல்லும்படி திட்டமிட வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்துக் கட்சித் தோழர்கள், கூட்டத்திற்கு உழைத்த கழகத் தோழர்களுக்குச் சால்வை அணிவித்தல், சிறப்புச் செய்தல் போன்றவற்றை கூட்டத்தின் தலைமையேற்பவர் செய்துகொள்ளலாம். 

அன்பின் காரணமாக ஆசிரியருக்குச் சால்வை அணிவிப்பதை, காலச் சூழலுக்கேற்ப, சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைப்படி பேச்சுக்கு முன்போ, பின்போ அமைத்துக் கொள்ள வேண்டும். 

தோழமைக் கட்சித் தோழர்கள் பேசுவதை முன் கூட்டியே நிறைவு செய்து, பிறகு அறிவிக்கப்பட்டுள்ள கழகச் சொற்பொழிவாளரும், அதன் பின் ஆசிரியர் மேடைக்கு வருகை தந்ததும் ஆசிரியர் அவர்களைப் பேசச் செய்வதும் முக்கியம். ஆசிரியர் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டு அதிக நேரம் பிறர் பேசிக் கொண்டிருந்தால், ஆசிரியர் உரையாற்றும் நேரம் குறையும் என்பதைத் தோழர்கள் உணர்ந்து திட்டமிட வேண்டும்.

- தலைமை நிலையம்,  திராவிடர் கழகம்


No comments:

Post a Comment