கோயம்பேடு மொத்த மார்க்கெட் பன்னாட்டு தரத்திற்கு உயர்த்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

கோயம்பேடு மொத்த மார்க்கெட் பன்னாட்டு தரத்திற்கு உயர்த்தப்படும் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

சென்னை, பிப். 6- கோயம்பேடு மார்க்கெட்டை பன்னாட்டு தரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘கோயம்பேடு வணிக வளாகத்தில், காய்கறி சந்தையில் 1985 கடைகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு ஒரு நாளில் 2 முறை குப்பை அகற்றப்படும். திருவிழா காலங்களில், அதிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பை அகற்றப்படும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தம் உள்ள 3,941 கடைகள் பன்னாட்டுத் தரத்தில் வெளிநாடுகளில் உள்ள மார்க்கெட் போல் தரம் உயர்த்தப்படும். அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தைப் பகுதியை பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ காஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி, துணை  ஆணையர் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment