வி.அய்.டி. பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் புகழாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

வி.அய்.டி. பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் புகழாரம்

வேலூர், பிப். 3- வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 

வேலூரில் உள்ள வி.அய்.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் (1.2.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி' மற்றும் ‘பேர்ல் ஆராய்ச்சி' கட்டடத்தை திறந்து வைத்தார். 

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளைநிலமாக மாற்றியவர் வேந்தர் விஸ்வநாதன். இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் கல்வியில் சிறந்த நிறு வனமாக வி.அய்.டி.யை விஸ்வநாதன் மாற்றி காட்டி இருக்கிறார். இந்த புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் மாணவர் விடுதி ஒன்றை அமைத்து அதற்கு ‘முத் தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி' என்று பெயர் சூட்டி இருப்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரை சூட்டியதற்காக முதல்-அமைச் சராக மட்டுமல்ல, அவருடைய மகன் என்ற முறையில் நான் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

26 வயதில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் என்றால், அது நம் முடைய விஸ்வநாதன்தான். இந் தியாவி லேயே ஒரு இளம் வயதில் எம்.பி. ஆக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். அதில் இருந்து அவருக்கு ஏறுமுகம்தான். வேலூரில் 1984ஆ-ம் ஆண்டு 180 மாணவர்களுடன் மிகச்சிறிய அளவில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. இன்றைக்கு வி.அய்.டி. பல்கலைக்கழக மாக வளர்ந்திருக்கிறது. 3 மாநிலங்களில் 4 கல்வி வளாகங்களை வைத்திருக்கிறார். சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் படிக் கிறார்கள். இந்தியாவில் முதல் 20 பல் கலைக்கழகங்களில் ஒன்றாக வி.அய்.டி. வளர்ந்திருக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய தரவரிசை பட்டியலில், உலக பல்கலைக்கழக தரவரிசையில் வி.அய்.டி. இடம்பெற்றிருக்கிறது.

சங்கர், சேகர், செல்வம் ஆகியோரும் அப்பாவை போலவே செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அரசியலில் செயல்பட்டு இருந்தால், வாரிசு என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கல்லூரி களில் அல்லது வேறு ஏதாவது தொழில் களில் இருந்தால் அந்த விமர்சனம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்பா வுக்கு தப்பாது பிறந்த பிள் ளைகளாக கல்வி சாம்ராஜ்ஜியத்தை கண்காணித்த காரணத்தால்தான் மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.

விஸ்வநாதன் கல்விப் பணிகளோடு சேர்த்து தமிழ் பணி ஆற்றுவதையும் கைவிடவில்லை. அதுதான் எனக்கு மிக மிகப்பிடித்த ஒன்று. உலக தமிழ் அமைப்பாக தமிழியக்கத்தை நடத்தி வருகிறார். இது மிக மிக முக்கியமான ஒன்று. தமிழ் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அதைத்தான் நான் சீர்திருத்த திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறபோது தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அழகு தமிழ் மொழியில் பெயர் சூட்டுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் பள்ளிக்கல்வியும், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கல்லூரிக் கல்வியும், முன்னேற்றம் அடைந்தது. நம்முடைய ஆட்சியில் உயர்கல்வியை யும் தாண்டி, ஆராய்ச்சி படிப்புகளும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சிய மாக இருக்கிறது. என்னுடைய எண் ணத்துக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த வி.அய்.டி. பல்கலைக்கழகம் உறு துணையாக இருக்கும் என்று நம்புகி றேன்.  சென்னை எப்படி 'மெடிக்கல் கேபிடல்' (மருத்துவ தலைநகர்) என்று போற்றப்படுகிறதோ, அதேபோல் வேலூர், வி.அய்.டி. பல்கலைக்கழகத்தின் முயற்சியால் 'கேபிடல் ஆப் ரிசர்ச்' (ஆராய்ச்சி தலைநகர்) என்ற வகையில் வளரும். வி.அய்.டி.யில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மாநில மாணவர்களும் படிக் கிறீர்கள். நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலையை அடைவதுதான் இந்தியா வுக்கே பெருமை. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் 

விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, காந்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்த குமார், ப.கார்த்திகேயன், வி.அமுலு விஜயன், வேலூர் ஆட்சியர் பெ.குமார வேல் பாண்டியன், வி.அய்.டி. பல் கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், துணை தலைவர்கள் சங்கர் விஸ்வ நாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி. செல்வம், துணை வேந்தர் ராம் பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment