‘திராவிட மாடல்' விளக்க தொடர் பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் தாம்பரம் பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

‘திராவிட மாடல்' விளக்க தொடர் பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் தாம்பரம் பொறுப்பாளர்கள்

தாம்பரம், பிப். 6-தாம்பரம் மாவட்டத்தில் வரும் 10.2.2023 அன்று மாலை பல்லாவரத்தில் நடைபெறும் ‘சமூகநீதி பாதுகாப்பு', ‘திராவிட மாடல்' விளக்க பொதுக்கூட்டம் குறித்து பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கினர். 

நேற்று (5.2.2023)  மாலை 6 மணியளவில் தாம்பரம் சண்முகம் சாலை வியாபார தோழர்களிடம் நன்கொடை வசூலில் தாம்பரம் மாவட்ட கழக தலைவர்.ப.முத்தையன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன்னி லையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை. கண்ணன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ்,மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் பொ.சுமதி, அரங்க.பொய்யாமொழி,தோழர் முரளி மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்ட  ஏற்பாடுகளில் கலந்து கொண்டனர். 

மகிழ்வுடன் நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர் வியாபார நண்பர்கள் மற்றும் தோழர்கள்.

No comments:

Post a Comment