திட்டம்
பயணிகளின் பொருள்களை பாதுகாக்க, ரயில்களில் டிஜிட்டல் மார்ட் லாக்கிங் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ரயில்வே துறை முடிவு.
சேலத்தில்...
சேலம் மாவட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது தொடர்பான ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் முடியும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தகவல்!
கீழடி
கீழடியில் உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தகவல்.
சைக்கிளிங்
சென்னை பெருநகருக்கான மாஸ்டர் பிளானில் சைக்கிளிங் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இல்லத்தில்...
வயது முதிர்ந்த மேனாள் படை வீரர்கள், போரில் கணவரை இழந்தவர்கள் ஆகியோர் சென்னை மயிலாப்பூர் நிம்மதி இல்லத்தில் தங்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தகவல். தொடர்புக்கு 044-22350780
கப்பல் போக்குவரத்து
புதுச்சேரி - சென்னை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கிய நிலையில் வாரத்தில் 2 நாள்கள் இயக்கப்பட உள்ளது.