மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா?

நல்ல வேளை ரத்து செய்து விட்டார்கள்

 மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நையாண்டி

 கொல்கத்தா, பிப்.14 பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங் குமா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  கேள்வி எழுப்பியுள்ளார். 

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத் தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்குப் பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று ஒன்றிய கால்நடைப் பராமரிப்புத் துறை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத் தியது. இதனை அடுத்து தங்களது அறிவிப்பைத் திரும்பப் பெற்றுவிட்டனர்

 இந்த நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா  கூறியதாவது:- பிப்ரவரி 14ஆம் நாளன்று பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு, பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? நல்லவேளை அவர்கள் பின் வாங்கி விட்டார்கள்; இல்லை என்றால் மருத்துவ மனைகளில் மாடு முட்டியதால் உதைத்ததால் சிகிச்சை பெரும் பாஜகவினரால் நிரம்பி இருக்கும் என்று நையாண்டி செய்துள்ளார்.


தேர்தல் யுக்தியா?

கன்னட நடிகர்கள், கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு   பிரதமர் மோடி விருந்தளிப்பாம்!

பெங்களூரு, பிப்.14  பெங்களூரு ராஜ்பவனில் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் ஆட்டக் காரர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கலந்துரை யாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  14-ஆவது பன்னாட்டு பெங்களூரு விமான கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அதனை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 12.2.2023 அன்று மாலை பெங்களூரு வந்தார். அன்றைய தினம் இரவு அவர் ராஜ்பவனில் தங்கினார். அங்கு அவர் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என பிரபலங்களை வரவழைத்து அவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் அஸ்வித் புனித் ராஜ்குமார், நடிகர் யஷ் (கே.ஜி.எப்.), ரிஷப் ஷெட்டி (காந்தாரா), நடிகை 'அய்யோ' சிரத்தா, கிரிக்கெட்   ஆட்டக்காரர்கள் அனில் கும்பிளே, வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் சிறீநாத், மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, தொழில் அதிபர் தருண் மேத்தா, நிகில் காமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்டவர்களுடன் பிரதமர் மோடி கலந் துரையாடினார்.

கருநாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னட நடிகர்கள், கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை அழைத்து பிரதமர் மோடி விருந்தளித்து கவுரவித்து கலந்துரையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment