அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 22.02.2023 அன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 7.5% உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். ப.செந்தில்குமார்,  தேசிய நலவாழ்வு குழும இயக்குநர்ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் நிர்வாக இயக்குநர் 

எம்.அரவிந்த், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வ விநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.இரா.சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.வி.பி. ஹரிசுந்தரி, மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment