நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்!

சென்னை,பிப்.13நகர்ப்புற மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு முதலீடுகள் செய்துவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகள் கிடைக்க வேண்டும்  என்பதற்காக ஜே.எம். பைனான்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது கிளை அலுவலக செயல்பாட்டை சென்னையில் விரிவுபடுத்தியுள்ளது.

பங்கு மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. இங் குள்ளவர்கள் முதலீடு மூலம் தங்களது நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே இங்கு எங்களது செயல்பாடுகளைத் தொடங்குவதோடு இங்கிருந்து எதிர் காலத்தில் விரிவுப் படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் மொகந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment