அதானி - அம்பானி கூட்டாளி நாட்டு மக்களுக்கு எதிராளி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 16, 2023

அதானி - அம்பானி கூட்டாளி நாட்டு மக்களுக்கு எதிராளி!

ஏர் இந்தியா நட்டத்தில் இயங்குகிறது என்று சொல்லி டாடா நிறுவனத்திற்கு மிகவும் சொற்ப விலைக்கு விற்று ஏர் இந்தியாவை தனியார் நிறுவனமாக்கினார் பிரதமர் மோடி.

 இப்போது டாடா வெளிநாட்டில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய விமானங்களை வாங் குவதை   - பிரதமர் மோடி ஏதோ இந்திய அரசு நிறுவனங்கள் சொந்தமாக  போக்கு வரத்திற்காக விமானம்  வாங்குவதைப் போன்று பெருமைப்படப் பேசிக் கொண்டு இருக்கிறார். 

அதேபோல் அமெரிக்க அதிபரும், பிரெஞ்சு அதிபரும் - பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானங் களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டதற்காக மோடியைப் பாராட்டி வருகின்றனர்., 

 இவர் இந்திய நாட்டின் பிரதமர் தான் - ஆனால் டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளராக பகுதி நேரப் பணியாற்றுகிறார்.  

இந்தியப் பிரதமர் மோடியை நினைத்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது., இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு இப்படி ஒரு பிரதமரா என்று வேதனைப்பட வைக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் பி.ஜே.பி. சார்பில் இந்தியாவை ஓர் அய்ந்தாண்டுக் காலம் ஆட்சி செய்து தாருங்கள் என்று கார்ப்பரேட்டுகளிடம் ஒப்பந்தம் போட்டு விடுவாரோ என்று நினைக்கும் அளவுக்கு நிலைமைகள் நாளும் மோசம் அடைந்து வருகின்றன.

இவர் கட்சி நடத்துகிறாரா, ஆட்சி நடத்துகிறரா என்ற கேள்விதான் எழுகிறது.

ஒன்றியத்தில் ஆளும் கட்சி தங்கள் ஆதர வாளர்களை ஆளுநர்களாக நியமிப்பது வழமை தான். ஆனால் இப்பொழுதுள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசு 100 விழுக்காடு ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் புடம் போட்டு பார்த்து தேர்வு செய்வது எந்த வகையில் ஜனநாயகப் பூர்வமானது?  

பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநி லங்களில் குடைச்சல் கொடுப்பதற்காகவா ஆளுநர்கள்?

பாசிசத்தை நோக்கி விரைகிறது மோடி ஆட்சி என்பது ஏதோ விளையாட்டுப் பேச்சல்ல; விபரீ தத்தை உணர்ந்து எடை போட்டுச் சொல்லும் வார்த்தைதான்.

கரோனா காலத்தில் வெகு மக்கள் வறுமை யின் பள்ளத்தில் குடை சாய்ந்து விழுந்த நிலையில், கார்ப்பரேட்டுகளின் வருமானம் 25 விழுக்காடு உயர்ந்தது என்றால் இந்த விபரீதத்தை என்ன வென்று சொல்லுவது!

ஒரு கால கட்டத்தில் காங்கிரசை "டாட்டா பிர்லா கூட்டாளி - பாட்டாளிக்குப் பகையாளி" என்று அண்ணா அவர்கள் சொன்னதுண்டு.

இப்பொழுது அதையெல்லாம் கடந்து "அதானி - அம்பானி கூட்டாளி, வெகு ஜனங்களுக்கு எதிராளி" என்று கூற வேண்டிய அவல நிலைதான்!

2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்தாவிட்டால் யானை தன் தலையில் மண்ணை வாரி இறைக்கும் நிலைதான் நாட்டு மக்களுக்கு  - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment