அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தின் அடைப்புகளை சரி செய்யலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தின் அடைப்புகளை சரி செய்யலாம்

நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும். இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். 

இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்யும் அற்புதமான சிகிச்சை குறித்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பி.ஜி.எஸ்.மருத்துவமனை வசந்தா இதய மருத்துவ மய்யத்தின் மருத்துவர் பிரபு கூறியதாவது:

இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம். குறிப்பாக புகை பிடித்தல், மது அருந்துதல், மனக்கவலை, மன அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை முக்கியமானவை. இதில் மாரடைப்பு என்பது இருதய ரத்த நாளத்தில் உட்சுவரில் படியும் கால்சியத்தினாலோ? அல்லது கொழுப்பினாலோ அல்லது வேறு கனிம, கரிம வேதிப்பொருட்களினாலோ இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி இருதய தசைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை விளைவிக்கின்றது. இதனால் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆகையால் எந்த ஒரு சிகிச்சையாக இருந்தாலும் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். இதை பல்வேறு கிளை ரத்தக்குழாய்களை இதயத்தில் உருவாக்குவதன் மூலம் இ.இ.சி.பி. தெரபி என்கிற சிகிச்சையானது அந்த ஆக்சிஜன் குறைபாட்டினை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்து விடும். இதனைஇயற்கை முறையிலான பைபாஸ் சிகிச்சை என்றும் கூறலாம். இந்த சிகிச்சையால் புதிய கிளை ரத்தநாளங்கள் இதயத்தில் உருவாக்கப்படு கின்றது. இத்தகைய புதிய வழிகளில் இரத்தம் செல்வதால் நெஞ்சுவலி மாரடைப்பு, மூச்சுத் திணறல் போன்றவைகள் ஏற்படாது. 

அது மட்டுமின்றி இந்தசிகிச்சையோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் சிகிச் சை, அதாவது கீலேசன் சிகிச்சையும் செய்து, கொண்டால் உடலில் உள்ள அனைத்து தேவையற்ற கழிவுகளும் வெளியேற்றப்படும். மற்றும் ரத்தக் குழாயில் உள்ள கால்சியம் அடைப்புகளை இச்சிகிச்சையால் பயன்படுத்தப்படும் மெக் னீசியம் இ.டி.டி.ஏ. என்கிற மருந்தானது இலகுவாக்கி அதன் தடிமனை குறைத்து விடுகின்றது. அதுமட்டுமின்றி இதய தசைகளில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் மற்றும் அசுத்தங்களை அகற்றுவதன் மூலம் இதயத்துக்கு மிகச்சிறந்த புதிய ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த கழிவுகளை நீக்கும்போது சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுப்பதாக அமையும் என்பது தவறு. இந்த சிகிச்சைகள் மூலம் சிறுநீரகங்கள் பாதுகாக் கப்படுகின்றன என்பது உறுதி.இத்துடன் மெடிக்கல் ஓசோன் (ஓ-3) தெரபி சிகிச்சையும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துயிர் பெறும். இதனால் செல் சிதைவு முற்றிலும் தடுக்கப்படும். இதனால் இதய தசைநார்களின் பலம் பன் மடங்கு உயரும். தசைநார்களின் சுருங்கி விரியும் தன்மை எளிதாக்கப்படும். 

இதயத்தின் செயல் திறன் கூடும். இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படும். இதனால நம் இதயத்தின் ஆக்சிஜன் பயன்பாடு அதிகரித்து நெஞ்சுவலி, மூச்சுத் திணறலில் இருந்து முற்றிலும் விடுபடலாம். இடது பிரதான ரத்தக் குழாயில் 50 சதவீத அடைப்பு இருந்தால் மட்டுமே பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படும். பொதுவாக நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சுத் திணறல் தெரியும். ஆகவே அதற்குமுன்பாகவே பரிசோதனை செய்து கொண்டால் சிகிச்சை எளிதாக அமையும் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment