தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.5300 கோடி முதலீடு - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.5300 கோடி முதலீடு - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை, பிப்.14 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசுக்கும், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே புரிந் துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (13.2.2023)  நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணைத் தூதர் டாகா மாசாயுகி, சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ்துணைத் தூதர் லிஸ் டால்போட் பர்ரே, நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கில்லாவுமா கார்டியர், நிசான் நிறு வனத்தின் தலைமை செயல் அலுவலர் அஸ்வினி குப்தா, நிசான்இந்தியா ஆப ரேஷன்ஸ் தலைவர்ஃப்ராங்க் டாரஸ், ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெங்கட் மிலாபாலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரான்ஸின் ரெனால்ட் மற்றும் ஜப்பானின் நிசான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்தான் ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட். கடந்த 2008 பிப்ரவரியில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ரெனால்ட் நிசான் நிறுவனம், 2007-_2008ஆ-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில், 4.80 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட ஒரு முழு மையான ஒருங்கிணைந்த அதிநவீன பயணிகள் வாகன உற்பத்தி ஆலையை நிறுவியது. இந்த ஆலை, 2010-ஆம் ஆண்டில் தனது உற்பத்தியை தொடங் கியது. இக்குழுமம் ரூ.13,000 கோடிக்கு மேல் முதலீடு மேற்கொண்டுள்ளது. உற்பத் திப் பிரிவில் 7,000 பேருக்கும், தொழில் நுட்பம் மற்றும் வணிக மய்யத்தில் 8,000 பேருக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள் ளது.  இந்நிறுவனங்களில் 16,000 பேருக் கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில்பெரும்பாலானோர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.

தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தி திறன் பயன்பாட்டை 2 லட்சம் கார்களில் இருந்து 4 லட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங் களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இதற்கான அரசாணை கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அரசுக்கும், ரெனால்ட்நிசான் ஆட் டோமோட்டிவ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கை யெழுத்தாகியுள்ளது.


No comments:

Post a Comment