நாடாளுமன்றத்தில் வெடித்த அதானி விவகாரம்: 3 நாள்களாக தொடர்ச்சியாக ஒத்திவைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

நாடாளுமன்றத்தில் வெடித்த அதானி விவகாரம்: 3 நாள்களாக தொடர்ச்சியாக ஒத்திவைப்பு

 இன்றும் கடும் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

புதுடில்லி,பிப்.7- நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (7.2.2023) கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், எதிர்க் கட்சிகள் பிரச்சினையை எழுப்ப முயன்றதைத் தொடர்ந்து மக்களவை நடவ டிக்கைகள் பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் விவாதத்தில் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர பிற எதிர்கட்சிகள் பங்கேற்க முடிவெடுத்திருப்பதாக தக வல்கள் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (7.2.2023) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அந்த வகையில் மக்களவை கேள்வி நேரத்து டன் தொடங்கியது. அப்போது, எதிர்க் கட்சிகள் அதானி குழும பிரச்சினையை எழுப்ப முயன்றன. அதற்கு கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளுமாறு அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியதால், பகல் 12 மணி வரை மக்களவை நடவடிக்கைகளை அவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளு மன்றக்கூட்டத் தொடர் ஜன.31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங் கியது. கடந்த 1.2.2023 அன்று 2023-2024ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதானி குழும விவகாரங்கள் தொடர்பான எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று (7.2.2023) குடியரசுத் தலைவர் உரை மீதும், நிதிநிலை அறிக்கை உரைமீதும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இது தொடர்பாக எதிர்கட்சிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற விவாதத்தில் ஆம் ஆத்மி தவிர பிற எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்று தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி யின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,"பெரும்பா லான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடைமுறைகளில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன. மேலும், பிரதமர் தொடர் புடைய அதானி குழும மெகா ஊழல் குறித்து நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக் கையையும் முன்வைப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாராந்திர கூட் டம் இன்று (7.2.2023) நாடாளுன்றத்தில் நடைபெற்றது. 

முன்னதாக, நாடாளுமன்றத்தின் இன்றையக் கூட்டத்தொடரில் எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து வியூகம் அமைப்பதற்கு மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் நாடாளுமன்ற அலுவல் அறையில் எதிர்க்கட்சி உறுப்பினர் களின் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "நாங்கள் ஒரு பிரச்சினையை எழுப்புவதற்கு முன்பாகவே அவர்கள் அவையை ஒத்திவைத்து விடுகின்றனர். எங்கள் தாக்கீது குறித்து எந்த குறிப்புகளும் இல்லை.

ஆனால் சபை சரியாக நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள். அதை சரியாக நடத்துவ தற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா? நாங்கள் அமளியில் ஈடுபடுவதாக அவர்கள் பொய்யை பரப்புகிறார்கள். பொய் கூறுவதில் பாஜகவினர் திறமையானவர்கள். பொய் கூறுவதிலும், மக்களை தவறாக வழிநடத்துவதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள்" என்றார்.

No comments:

Post a Comment