குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய இளம்பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய இளம்பெண்

பாட்னா, பிப் 18  பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ருக்மணி குமாரி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் தனது கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடை பெற்று வருகிறது. நிறைமாத கர்ப்பிணியான பெண் ருக்மிணி கடந்த 14.2.2023 அன்று கணிதத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அன்றைய இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15.2.2023 அதிகாலை 6 மணி அளவில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் ருக்மணிக்கு அறிவியல் பாட பொதுத்தேர்வு இருந்துள்ளது. பிரசவமான உடலுக்கு ஓய்வு தேவை, தேர்வை அடுத்த முறை எழுதிக்கொள்ளலாம் என அனைவரும் ருக்மணியை அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், ருக்மணி தன்னால் முடியும், நான் நிச்சயம் தேர்வு எழுதுவேன் என்று கூறி ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு சென்று பொதுத்தேர்வை எழுதியுள்ளார். தேர்வை வெற்றி கரமாக எழுதி முடித்துவிட்டு நல முடன் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பல இடங்களில் பெண்கள் தங்கள் திருமண கோலத்திலேயே தேர்வு எழு தும் நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு பெண் பிரசவமான சில மணிநேரத்திலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, தனது அசாத்திய தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 

No comments:

Post a Comment