ரூ.325 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

ரூ.325 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, பிப். 1- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத் துக்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1இல் ரூ.325 கோடியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (31.1.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அனல் மின் நிலையத் துக்காக தற்போது, தூத்துக்குடி துறை முகம் தளம்-1 மற்றும் தளம் 2இல் நிலக்கரியை கையாள சுமார் 50ஆயிரம் டன் முதல் 55 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றுக்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின் றன. அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாளவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் தலா 210 மெகாவாட் முழு அளவில் மின் உற்பத்தி தடையின்றி நடைபெறவும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், 70 ஆயிரம் டன் முதல் 75 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல் களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப் பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் ரூ. 325 கோடியில் தூத்துக்குடி துறை முகம் தளம்-1இல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். புதிய இயந்திரங்கள் வாயி லாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றுக்கு 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரை அதிக கொள்ளளவு நிலக்க ரியை இறக்க முடியும். இதனால், நிலக் கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றுக்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டுக்கு ரூ. 80 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சேமிப்பாகக் கிடைக்கும். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கீதாஜீவன், 

வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செய லர் வெ.இறையன்பு, எரிசக்தித்துறை செயலர் ரமேஷ்சந்த் மீனா, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன், இயக்குநர் (உற்பத்தி) த.ராசேந்திரன், இயக்குநர் (திட்டங்கள்) மா.ராமச்சந் திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment