2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி

ராய்ப்பூர் பிப் 28 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் 2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பய ணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் நடைபயணம் மேற்கொண்டார். இந்த  நடைப் பயணத்தில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி காஷ்மீரில் முடிவடைந்தது. தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மகாராட்டிரா, குஜராத், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த நடை பயணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் இந்நிலையில், ராகுல் காந்தி விரைவில் 2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பய ணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ஆம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-ஆவது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ள் உள்ளது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி  உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படு கிறது.


No comments:

Post a Comment