பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 பள்ளி ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 பள்ளி ஆசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு விழா


தஞ்சை, பிப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 விருது வழங்கும் விழா 25.02.2023 அன்று நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மொழி வாழ்த்தோடு தொடங் கிய இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பல் கலைக்கழகத்தின் சேர்க்கை இயக்குநர் முனைவர் ஜெ. ஜெய சித்ரா வரவேற்றார். 

மானுட சமூகத்தை உயர்த்தி...

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவுக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய துணை வேந்தர் பேராசிரியர் செ.வேலுச் சாமி, இந்த விருது எங்கள் நிறுவனத்தின் வேந்தர் ஆசிரி யர் கி. வீரமணி அவர்களின் நெஞ்சில் உதித்தது; ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்களின் செயலூக்கத்தி னால் விளைந்தது என்றார். மேலும், மானுட சமூகத்தை உயர்த்தி அறிவார்ந்த பக்குவப் பட்ட சமூகமாக மாற்றிடும் பணியில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று பாராட்டினார்.

மனத்தில் நல்ல தாக்கத்தை...

வாழ்த்துரை வழங்கிய பல் கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சிறீவித்யா, நம் முதல் ஆசிரியர் நம் தாய்தான். பெண்கள் முன்னேற்றத்தில் பள்ளிக் கல்வியின் பங்கும், பெண்கள் கல்வி பெற தந்தை பெரியார் - அன்னை மணியம் மையார் அவர்களின் பங்கும் மகத்தானவை. தங்களிடம் பள்ளிக் கல்வி பயின்ற மாணவர் களின் மனத்தில் நல்ல தாக் கத்தை ஏற்படுத்தியதன் கொடை தான் அவர்களால் உங்களை இச் சமூகத்துக்கு அடையாளப் படுத்தும் இப் பெரியார் மணி யம்மை நல்லாசிரியர் விருது - 2023 என்று கூறி ஆசிரியப் பெருமக்களையும் அவர்களை அறிமுகப்படுத்திய மாணவச் செல்வங்களையும் பெருமைப் படுத்தினார்.

போற்றிப் பின்பற்றப்பட வேண்டிய...

சிறப்புரை வழங்கிய மாவட் டக் கல்வி அலுவலர் கோவிந்த ராஜ், பயின்ற மாணவர்கள் பயிற்றுவித்த ஆசிரியர்களை விருதாளர்களாகத் தேர்ந்தெ டுத்திடும் இந்த நடைமுறை எல்லா உயர்கல்வி நிறுவனங் களாலும் போற்றிப் பின்பற்றப் படவேண்டிய நடைமுறை. இதை அறிமுகப்படுத்தி, நம் நாட்டின் எந்தப் பல்கலைக் கழகமும் செய்யாத உயர்ந்த பணியை மேற்கொண்டு விருது வழங்கி உயர்ந்து நிற்கும் பெரியார் மணியம்மை நிறு வனத்தையும் விருதாளர்களான ஆசிரியப் பெருமக்களையும் பள்ளிக் கல்வித்துறையின் சார் பில் பாராட்டி மகிழ்வதாகத் தெரிவித்தார்.

ஏற்றிவிட்ட ஏணிகளான...

விருதுகளையும் சான்றுக ளையும் வழங்கிச் சிறப்பித்த தஞ்சை தமிழ்ப்பலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன்: பல்கலைக் கழகங்களின் வரலாற்றில் முதல் முயற்சி உயர்கல்விக்குத் தங்களை ஏற்றிவிட்ட ஏணி களான பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் இந்த விருதும் பாராட்டும் என்றார். ஆசிரி யர்களாகிய நாம் நம்மின் இந்த வளர்ச்சி நிலைக்குப் பாடுபட்ட காந்தியார் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அப் துல் கலாம் போன்ற தலை வர்களுக்கு நன்றி செலுத்துவது என்பது இத் தலைவர்களை பன்னூற்றுக் கணக்கில் இப் புதிய தலைமுறையிலிருந்து உருவாக்குவதுதான் உண்மை யான நன்றிக் கடன் என்றார். மாணவர்களுக்கு காக்கை தன் குஞ்சுகளுக்கு பல உணவுகளைத் தேடித் திரட்டி தன் வாயால் மென்று கூழாக்கி ஊட்டுவது போல், ஆசிரியர்களாகிய நாம் திசையெட்டும் தேடித்திரட் டிய நூல்களிலிருந்து படித்துத் தெளிந்து அதன் சாற்றை மட் டும் மாணவர்களுக்கு இலகுவாக ஊட்டவேண்டும் என்றார்.

கல்வியியல் துறை பேராசிரி யர் சேதுராசன் நன்றியுரை யோடு நண்பகல் 1.15 மணிக்கு நிறைவுற்ற விருதளிக்கும் விழா வுக்கு வந்திருந்த அனைவருக் கும் மரக்கறி மற்றும் புலாலு டன் அறுசுவை விருந்தளிக்கப் பட்டது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 2022--2023 கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள முத லாமாண்டு மாணவர்களிடம் பரிந்துரைகள் கேட்பு நடத்திய போது, 144 பள்ளிகளின் 255 ஆசிரியர்களுக்கான பரிந்து ரைகள் பெறப்பட்டன. அவற் றுள் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என 80 ஆசிரியப் பெருமக்கள் விருதாளர்களாக ஒவ்வொரு பள்ளி மாணவர்களாலும் தேர்ந்தெடுக் கப்பட்டிருந்தனர். 

விருதும் பாராட்டுச் சான் றும் பெறத் தங்கள் குடும்பத் தோடு வந்திருந்த ஆசிரியர்கள் எனும் அறப் பணியாளர்களான விருதாளர்கள், இந்தியாவின் எந்தப் பல்கலைக் கழகமும் செய்யாத இந்த உயர்வான பணியை மேற்கொண்ட பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் எங்கள் குடும்பத்தார் நெஞ்சிலும் மாணவர்கள் சிந்தையிலும் நிகரற்று உயர்ந்து நிற்கிறது என்று பாராட்டி நன்றி கூறி மகிழ்ந்தனர். தஞ்சை, பிப். 28- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான பெரியார் மணியம்மை கல்விச் சிற்பி - 2023 விருது வழங்கும் விழா 25.02.2023 அன்று நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மொழி வாழ்த்தோடு தொடங் கிய இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பல் கலைக்கழகத்தின் சேர்க்கை இயக்குநர் முனைவர் ஜெ. ஜெய சித்ரா வரவேற்றார். 


No comments:

Post a Comment