நைட்ரஜன் பயன்பாட்டைக் குறைத்தால் பூமியின் நலன் சிறக்கும்: ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

நைட்ரஜன் பயன்பாட்டைக் குறைத்தால் பூமியின் நலன் சிறக்கும்: ஆய்வு

நைட்ரஜன் நிறைந்த உரங்களைச் சிறப்பாக நிர்வகிப்பது சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்துக்கும் நன்மையை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாற்றுப் பயிர்களின் வழியும் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவதன் மூலமும் அதனை எட்ட முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். 

ஆனால் அதே நேரம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உலக அளவில் விளை நிலங்களில் நைட்ரஜன் ஏற்படுத்தும் தூய்மைக்கேட்டைக் குறைப்பது பெரும் சவால் என் பதையும் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

ரசாயன உரங்களின் தீவிரப் பயன் பாடு கடந்த நூற்றாண்டில் 4 மடங்கு விரிவாக்கம் கண்ட மக்கள்தொகைக்கு உணவளிப்பதற்கு உதவியது. மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கவும் இது அவசியமாகிறது.

ஆனால் ஒரு காலத்தில் பசுமைப் புரட்சி என்று அழைக்கப்பட்ட பயிர்களின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. 

இன்றைய சூழ்நிலையில் உரங்களில் உள்ள நைட்ரஜனில் பாதிக்கும் மேற்பட்டவை காற்று,  நீர் ஆகியவற்றுக்குள் ஊடுருவி, மோசமான தூய்மைக் கேட்டை ஏற்படுத்துகின்றன. 

அத்துடன் மண்ணில் அமிலம் கலத்தல், பருவநிலை மாற்றம், ஓசோன் சிதைவு, பல்லுயிர் இழப்பு போன்ற பாதிப்புகளும் உண்டாகின்றன. 

இவற்றைக் கருத்தில்கொண்டு காற்று, நீர் போன்றவற்றில் நைட்ரஜன் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என சிஜியாங் (Zhejiang)  பல்கலைக்கழ கத்தின் பேராசிரியர் பாவ்ஜிங் கு  (Baojing Gu) கிதிறியிடம் கூறினார்.

உலகம் இயற்கையாகவே நைட்ரஜ னால் நிறைந்துள்ளது. இது பூமியில் உள்ள அனைத்து உயிர்களின், குறிப் பாக தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கிய மானது.

பூமியின் வளிமண்டலத்தில் கிட்டத் தட்ட 80 விழுக்காடு நைட்ரஜன். இருப் பினும் வாயு வடிவத்தில் (N2)  பெரும் பாலான உயிரினங்களுக்கு அது நேரடி யாகப் பயன்படுவதில்லை.

No comments:

Post a Comment