மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 19, 2023

மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடில்லி, ஜன. 19- திரிபுரா, நாகா லாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப் பேரவை களின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங் களிலும் சட்டப் பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று (18.1.2023) அறிவித்தது. திரிபுராவில் பிப்.16ஆம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்.27ஆம் தேதியும் சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்ட மாக நடைபெறும். தேர்தல் முடிவு கள் மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப் படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிப்.16ஆல் தேர்தல் நடக்க உள்ள திரிபுராவில் வேட்புமனு தாக்கல் வரும் 21ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி முடிவடை கிறது. 31ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்பப் பெற பிப்.2ஆம் தேதி கடைசி நாள் அதேபோல, பிப்.27 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள மேகாலயா, நாகாலாந்தில் வேட்பு மனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்கி பிப்.7ஆம் தேதி முடிவடைகிறது. பிப்.8ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறு கிறது. வேட்பாளர்கள் மனுவை திரும்பப் பெற பிப்.10ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. பள்ளித் தேர்வுகள், பாது காப்பு படைகளை அனுப்புதல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட் டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் உடன் இருந்தனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேரவை செயலர் அறிவித்தார்.  தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில், 3 மாநில தேர்தல் களுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.31 தொடங்கி பிப்.7 வரை நடக்கிறது. மனுக்கள் பரிசீலனை பிப்.8இல் நடக்கிறது.

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் பிப்.10ஆம் தேதி. வாக்குப்பதிவு பிப்.27ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment