பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தீ பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தீ பாதுகாப்பு, முதலுதவி பயிற்சி

வல்லம், ஜன. 31- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் தீ பாதுகாப்பு ஆபத்து கால முதலுதவி காப்பாற்றி வெளியேற் றும் முறை பற்றியான திறன் பயிற்சி தஞ்சாவூர் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறை உயர் அலுவ லர்கள் மற்றும் கள வீரர் களால் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழி நுட்ப நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் முனைவர் ஜெ. சத்ய பிரியா வரவேற்புரை யாற்றினார். பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பேரா பூ.கு.சிறீவித்யா மற்றும் துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையின் நிலைய மேலாளர் டி.பொன்னுசாமி மற்றும் நிலைய சிறப்பு மேலாளர் டி.பொய்யாமொழி ஆகியோரும் சிறப்பு உரையாற்றினர். எட்டு தீ அணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி அளிப் பில் ஈடுபட்டனர். பயிற்சி யில் பல்வேறு வகையான ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது, எப்படி நாமே பாதுகாப்பு வீரர்களாக மாறுவது மற்றும் தரப்படும் முதலு தவிகள் ஆகியவை பயிற் றுவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான தீ அணைப்பான்களை எப்பொழுது எப்படி பயன் படுத்துவது, தீ அணைப்பு வண்டி எவ்வாறு இயங்கு கிறது  என்பவை குறித்த அனைத்து பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக் கப்பட்டது. 

இறுதியில் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி நன்றியுரை ஆற்றினார். 

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை வீரமணி மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் ஒருங்கிணைத் தனர். 

No comments:

Post a Comment