பல்கலைக்கழக பாடங்களில் கவிஞர் தமிழ் ஒளி படைப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 6, 2023

பல்கலைக்கழக பாடங்களில் கவிஞர் தமிழ் ஒளி படைப்புகள்

உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி

சென்னை, ஜன. 6 அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பாடத்திலும், கவிஞர் தமிழ்ஒளியின் ஏதாவது ஒரு படைப்பு  இடம் பெறும் வகையில் பாடத் திட்டம் அமைக்கப்படும் என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உறுதி அளித்தார். 

சென்னை பல்கலைக் கழகத்தில், கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளை தொடக்க விழா 4.1.2023 அன்று பல்கலைக் கழக பவள விழா கலையரங்கில் நடை பெற்றது. சென்னைப் பல் கலைக் கழகத் தமிழ் இலக்கி யத் துறையும், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழு வும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. 

கவிஞர் தமிழ்ஒளி  நூற் றாண்டு விழாக்குழுத் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் நோக்கவுரையாற்று கையில், “கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பல்கலைக் கழகத்தில் இருக்கை ஒன்றை அமைக்க வேண்டும். தமிழ்ஒளிக்கு அரசு விழா நடத்த வேண்டும், அதில் முதல மைச்சர் கலந்து  கொள்ள வேண்டும். கவிஞர்  தமிழ்ஒளி பெயரில் விருது  வழங்குவதோடு, சிலை ஒன்றை யும் நிறுவ வேண்டும். கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்குள் அரசு இதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரினார். 

இதனைத் தொடர்ந்து அறக்கட்ட ளையை தொடங்கி வைத்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி, “கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகள், படைப்புகளை இளம் தலை முறையிடம் கொண்டு சென்று,  தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். தமிழ் ஒளியின் படைப்புகளில் திராவிட இயக்க கருத்துக்களும், தொழிலாளி வர்க்க கருத்துக்களும் நிரம்பி இருக்கின்றன. அடித் தட்டு மக்களுக்காகவும், உழைப்பாளி மக்களுக்காகவும் அவர் படைத்த கருத்துக் களை, கவிதைகளை அனைத் துப்பகுதி மக்களிடமும் கொண்டு செல்வோம்” என்றார். 

“கவிஞர் தமிழ்ஒளி படைப்பு களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஏற் பாடுகள் செய்யப்படும். உயர் கல்வித் துறையும், சென்னைப் பல்கலைக் கழகமும் அதற் கான பணிகளை செய்யும். முதலமைச்சரிடம் ஆலோசித்து நிதி ஒதுக்கவும், பல்கலைக் கழகம் நிதி வழங் கவும், ஆராய்ச்சி செய்யவும் நட வடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர்கல்விக்கான பாடத்திட்டம் எழுதப்பட்டு வரு கிறது. அனைத்து பல்கலைக் கழக பாடத்திலும் கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை, பாடல் அல்லது ஏதாவது ஒரு படைப்பு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்  கூறினார்.

 அதன்பிறகு, கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளைப் பதிப்பித்து, வெளியிட்டு வரும்  ‘புகழ் புத்தகாலயம்’ செ.து.சஞ்சீவி-யின் மனைவி வசந்தாவை அமைச்சர் கவுரவித்தார். இந்நிகழ்விற்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் ச.கவுரி தலைமை தாங்கி னார். துறைத்தலைவர் கோ. பழனி வரவேற்றார். கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனை வர் இ.சா. பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு செயலாளரான இரா.தெ. முத்து,  விழாக்குழு முன்னெடுப்புகளை விளக்கினார். பொருளாளர் வே.மணி நன்றி கூறினார்.  நிகழ்வை முனைவர் 

ஆ. ஏகாம்பரம் தொகுத்தளித்தார்.


No comments:

Post a Comment