முதலமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

முதலமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளா தார முன்னேற்றத்திற்கும், நம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும்!

இத்திட்டம், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்குக் கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வந்த திட்டமாகும்!

அறிஞர் அண்ணா 'எழுச்சி நாள்' கொண்டாடிய திட்டம்; திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தின் மூலம் நமது தலைமையில் வற்புறுத்திய திட்டம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஒன்றிய அரசில் தி.மு.க. இடம்பெற்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, சேதுக்கால்வாய்த் திட்டத் தினைச் செயல்படுத்திட, தீவிர முயற்சியை எடுத்ததின் விளைவாக, டி.ஆர்.பாலு அவர்கள் கப்பல் துறை அமைச்சராகிய நிலையில், இத்திட்டம் தொடங்கப்பட்டு நடந்தது; சுமார் ரூ.2,493 கோடி செலவழித்து, இன்னும் 23 கிலோ மீட்டர் தூரமே பணி மீதமிருந்த நிலையில், இராமர் பாலம் இடிபடக் கூடாது என்று அன்றைய பா.ஜ.க., அ.தி.மு.க., சுப்பிரமணியசாமி போன்றோர் எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை ஆணை பெற்றனர்.

''இராமர் பாலம் அல்ல, அது வெறும் பவளம், சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்ட ஆதாம்பாலம்தான்'' என்று நாடா ளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெளி வாகவே, இராமர் பாலம் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என்று இப்பொழுது கூறியுள்ளார்.

''மீண்டும் அந்தத் திட்டத்தை நிறை வேற்றி முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும்'' என்று தந்தை பெரியார் நினைவு நாளில், திருச்சியில் செய்தியாளர் களிடையே விளக்கமாகக் கூறியதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதலமைச்சருக்கு வேண்டுகோளும் விடுத்தோம்.

இன்று (12.1.2023) சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்களால் முன்மொழியப் பட்ட அந்தத் தீர்மானத்தை, ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்ததற்கு, முதலமைச்சர் அவர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்து, முயற்சி திரு வினையாகட்டும் என்று வாழ்த்துகிறோம்! நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்!!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

12.1.2023

No comments:

Post a Comment