தலைமை நீதிபதி கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை,ஜன.23- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். இதனோடு, உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்.
-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment