மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரியா? கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்திற்குத் தடை விதித்தது சரியா? கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது!

திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் செய்தியாளர்களிடையே தமிழர் 

மஞ்சக்குடி, ஜன.29 மோடிபற்றிய பிபிசியின் ஆவணப் படத்திற்குத் தடை விதித்திருக் கிறார்களே! கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்ப தற்கு யாருக்கும் உரிமையில்லை; அந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் பரவி யிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

நேற்று (28.1.2023) திருவாரூர் மாவட்டம் மஞ்சக் குடிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.



அவரது பேட்டி வருமாறு:

பான்மசாலா, குட்கா போன்றவற்றிற்குத் 

தமிழ்நாடு அரசு தடை போட அதிகாரம் இல்லையாமே!

செய்தியாளர்: பான்மசாலா, குட்கா போன்ற போதைப் பொருள்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால், இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் என்றால், பான்மசாலா, குட்கா போன்றவற்றைத் தடை செய்வதற்கு மாநில அரசு களுக்கு அதிகாரமில்லை; ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள்; இப்படி எல்லா அதிகாரமும் ஒன்றிய அரசிடம் இருந்தால் எப்படி?

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படும்; சமூக விரோதிகள் தடுக்கப்படுவார்கள்

தமிழர் தலைவர்: இது ஒரு சட்டப் பிரச்சினை. இந்த சட்டப் பிரச்சினைக்கு உடனடியாக அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தி ருக்கிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது; நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும்.

ஒருவேளை அப்படி அதைத் தாண்டி வேறு ஏதா வது நடந்தாலும்கூட, சட்டத் திருத்தம் செய்யலாம்.

இந்த நாட்டில் ஏராளமான அளவிற்கு இளைஞர்கள் போதையால் கெட்டுப் போகிறார்கள்.

சட்டத்தில் இருக்கின்ற சந்து பொந்துகளை சிலர் பயன்படுத்திக்கொண்டு, போதைப் பொருள்களைப் பரப்பலாம் என்று நினைப்பது தவறாகும்.

ஒழுக்கக் கண்ணோட்டத்திலும் தவறு; சட்டப்படியும் தவறு; சமூக ரீதியாகவும் தவறாகும்.

ஆகவே, சட்டத்தில் இருக்கிற ஓட்டைகள் அடைக் கப்படும்; சமூக விரோதிகள் தடுக்கப்படுவார்கள்.

மோடிபற்றிய ஆவணப் படத்தினை வெளியிடக் கூடாது என்று தடை செய்திருக்கிறார்களே...

செய்தியாளர்: வீடியோ பார்ப்பது என்பது அவர வருடைய தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால், பிபிசி வெளியிட்டுள்ள மோடிபற்றிய ஆவணப் படத்தினை வெளியிடக் கூடாது என்று தடை செய்திருக்கிறார்களே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பிபிசி என்பது ஒரு சுதந்திரமான நிறுவனமாகும். அந்த நிறுவனம் யாரைப்பற்றியும் கவ லைப்படாது. இங்கிலாந்து நாட்டில், உரிமம் இல்லாமல் கார் ஓட்டியதற்காக அமைச்சருக்கு அபராதம் விதித் தார்கள்.கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு 

யாருக்கும் உரிமையில்லை!

அந்த நாட்டைப் பொறுத்தவரையில், அவர்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவார்கள். அந்த அரசாங்கம்கூட பிபிசி நிறுவனத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாத அளவிற்கு, அது ஒரு சுதந்திரமான நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் நம்பகத்தன்மையானது என்று பிரதமர் மோடி இதற்குமுன் பாராட்டியதும் உண்டே!

எனவே, அவர்கள், அவர்களுடைய கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து நான் நேற்றுகூட கண்டன அறிக்கையை எழுதியிருக்கிறேன்.

ஆகவே, அந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. வேண்டுமானால், இங்கே அவர்கள் பறிக்கலாம்; அது நெருப்புக் கோழி மனப் பான்மையாகும். உலகம் முழுவதும் அந்த ஆவணப் படம் பரவியிருக்கிறது. உண்மையைக் கண்டு யாரும் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியம் கிடையாது.

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment