பட்டுக்கோட்டை சா.சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

பட்டுக்கோட்டை சா.சின்னக்கண்ணு மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

பட்டுக்கோட்டை, ஜன. 30- பட்டுக் கோட்டை மாவட்ட துணைத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான சா. சின்னக்கண்ணு (வயது90) அவர்கள் 25.1.2023 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற் றதை யொட்டி 26.1.2023 அன்று அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையிலும்,மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி .எஸ் சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

பட்டுக்கோட்டை நகர தலைவர் சிற்பி சேகர், நகரச் செயலாளர் கா. தென்னவன், மாவட்ட துணைச் செயலாளர் அ‌.காளிதாசன், ஒன்றிய தலைவர் ரெ.வீரமணி, ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரங்கசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.ரத்தின சபாபதி, மாவட்ட ப.க செயலாளர் இரா.காமராஜ், மாவட்ட ப.க அமைப்பாளர் மா.சிவஞானம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முத்து.துரைராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி தலைவர் என் .நடராஜன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி செயலாளர் ம.வள்ளுவபெரியார்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் வீ.ஆத்மநாதன், மாவட்ட ப.க அமைப்பாளர் மாணிக்கசந்திரன், மன்னார்குடி மாவட்ட செயலாளர் நீடாமங் கலம் கணேசன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ. அண்ணாதுரை, மண்டல இளைஞர் அணி செயலாளர் வே.இராஜவேல், மாநில மாண வர் கழக அமைப்பாளர் செந்தூ ரப் பாண்டியன், ஸ்டேட் பேங்க் ஓய்வு பெற்ற அதிகாரி ஜெயரா மன், நகர இளைஞர் அணி தலைவர் கா.தென்னரசு, ஒன்றிய கழக துணைச் செயலாளர் அ. ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா. ஜெயக் குமார் தனது இரங்கல் உரையில், மறைவுற்ற சின்னக் கண்ணு அவர்களின் சிறப்புகளையும், அவர் திராவிடர் கழகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டினையும் எடுத்துக்கூறி அவரது பெயரில் ஒரு அறக்கட் டளையை நிறுவ வேண்டும் என் றும், ஏழை எளிய மாணவர்கள் பயன்படும் வகையில் அது செயல்பட வேண்டும் என்றும் கூறியதோடு சின்னகண்ணுவின் மறைவுக்கு பின்னும் அவர் விட்டுச் சென்ற கொள்கைகளை  அவரது குடும்பத்தார் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு திராவிடர் கழகம் என் றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியதோடு அவரை இழந்து வாடும் குடும் பத்தார் அனைவருக்கும் தனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங் கலையும் தெரிவித்து மறைவுற்ற அவர்களுக்கு தனது வீரவணக்கத்தை தெரிவித்து தனது இரங் கல் உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் கழகத் தோழர் கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

26.1.2023 அன்று மாவட்ட செயலாளர் மல்லிகை சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர் சோமணிலகண்டன், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப் பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு. பழனிவேல், தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு ஆகியோர் மறைவுற்ற சின்னக்கண்ணுவுக்கு மரியாதை செலுத்தினர். 

 கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கை நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இறுதியாக  எந்த ஒரு மத சடங்குகளும் இன்றி  தோழர் களின் வீரவணக்க முழக்கத்தோடு காலை 11.00 மணி அளவில் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் இறுதி மரியாதை செய்யப்பட் டது‌.

No comments:

Post a Comment