துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் - பாராட்டு

கந்தர்வக்கோட்டை, ஜன. 7- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் நடத்தப்பட்ட  துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்க ளுக்கு துளிர்  சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ் விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந் திரன் தலைமை வகித்தார். கல்வியாளர் சக்தி முருகேசன் முன்னிலையில் வைத்தார்.

 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்க ளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசிய போது:

தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தால் ஆண்டுதோறும் துளிர் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வினை 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு எழுதலாம் என்றும், தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு  தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தால் சுற்றுலா அழைத்துச் செல்லப் படும் எனவும், அதுபோல அறிவியல் இயக்கம் வினா-விடை, மந்திரமா? தந்திரமா? துளிர் இல்லம் போன்றவை நடத்தி மாணவர்களுக்கும் சமூகத்திற் கும் மாற்றத்தை ஏற்படுத்தி வரு கிறது என்றும், அறிவியல் மனப் பான்மையை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக 40 ஆண்டுக ளுக்கும் மேலாக ஏற்படுத்தி வரு கிறது எனவும், மூடநம்பிக்கையை ஒழிக்கவும் அறிவியல் மனப் பான்மையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு பணி களை செய்து வருகிறது என்றும், மாணவர்கள் துளிர், ஜந்தர் மந்தர், சிறகு ஆகிய இதழ்களை வாசிக்க வேண்டும் எனவும் பேசினார். இப்பள்ளியின் ஆசிரியை கலைமணி சிறப் பாசிரியர் அறிவழகன், தன்னார் வலர் திலகவதி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னதாக பள்ளியின் சார்பில் தோட்டங் கள் சிறப்பாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாடுகள் மூலம் விதை முளைத்தல்,வேர் மூலம் தாவரங் களுக்கு எவ்வாறு நீர் கிடைக் கிறது . மாணவர்களுக்கும் மரம் நடுவதன் அவசியத்தையும்,.   மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி, மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி றது. அறிவியல் கணித ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment