விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் முதற்கட்ட திட்டம் இந்தாண்டு நிறைவேறும் மயில்சாமி அண்ணாதுரை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 3, 2023

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் முதற்கட்ட திட்டம் இந்தாண்டு நிறைவேறும் மயில்சாமி அண்ணாதுரை தகவல்

பொள்ளாச்சி, ஜன. 3- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 1952ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. கடந்த 70 ஆண்டுகளில் அப்பள்ளியில் சுமார் 23 ஆயிரம் மாணவர்கள் படித்து முடித்து சென்றுள்ளனர். இப்பள்ளியில் மேனாள் மாணவர்கள் சங்கம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி யில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர் சதானந்தம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பள்ளியின் மேனாள் மாணவரும், இஸ்ரோ மேனாள் விஞ்ஞானியும், சந்திராயன்-1 திட் டத்தின் இயக்குநருமான மயில் சாமி அண்ணாதுரை மாணவர் சங்கத்தின் இணையதள செய லியை தொடங்கி வைத்து பேசிய தாவது:

மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண் டும். எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இங்குள்ள மேனாள் மாணவர்களில் பல ரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் முன் னேறி உள்ளனர். இந்த பள்ளி யில் படித்த நாங்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடி கிறது என்றால், உங்களாலும் உயரத்தைத் தொட முடியும்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எந்த நிலையிலும் சோடை போய்விட மாட்டார் கள். ஒரு சாதாரண நிலையில் உள்ள மாணவர் படித்து முன் னேறும்போது அவரது குடும்பத் தின் நிலை உயர்கிறது. நாட்டின் நிலை மாறுகிறது. சிறப்பான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதிகம் உள்ள பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களி டம் அவர் கூறும்போது, “அமெ ரிக்கா விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு அங்குள்ள கட்ட மைப்பு சரியான முறையில் உள் ளதா என்பதை ஆய்வு செய்த பிறகு மனிதனை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் ககன் யான் விண்கலம் திட்டம் மூன்ற டுக்கு திட்டமாக செயல்படுத்தப் பட்டு வருகிறது.

முதல் கட்டமாக இந்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் ஈடுபட் டுள்ளோம். முதல் கட்ட பணி கள் இந்தாண்டு நிறைவேறுவ தற்கான வாய்ப்பு உள்ளது. 2ஆம் கட்டமாக ஆளில்லா விண்கலம் சென்று வந்த பிறகு 3ஆவது கட்டமாக மனிதர்களை அனுப்ப முயற்சி நடக்கும்” என்றார்.

No comments:

Post a Comment