பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பொங்கல் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பொங்கல் விழா

வல்லம், ஜன. 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொங்கல் விழா 7.1.2023 அன்று பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் சார்பாக நடைப்பெற்றது. மாணவர் அமைப்பின் தலைவர் மா.அபிநயசிறீ (மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டுத்துறை) வரவேற்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேலுச்சாமி தலைமையுரையாற்றினார். மேலும் துறைத்தலைவர், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் பொங்கல் வாழ்த்துகளை யும், 2023ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்தி னையும்  தெரிவித்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பூ.கு.சிறீவித்யா வாழ்த்துரை வழங்கி இவ்வாண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.  

பொங்கல் விழாவை முன்னிட்டு தஞ்சையில் வாழும் நலிவுற்ற கலைஞர்கள் மூன்று பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்த தொகை ரூ. 60 ஆயிரம் பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டன. மேலும் மாணவர்கள் அமைப்பின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழ் பாரம்பரியக் கலைகளான நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல்கள், கட்டக்கால் ஆட்டம், தப்பாட்டம், சிலம் பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், பின்னலாட்டம், கரகாட்டம், மேற்கத்திய நடனம், உறியடி, கயிறு இழுத்தல் போட்டி மற்றும் நெருப்பாட்டம், ஆகியவை மாணவர்கள் மற்றும் கலைஞர்களோடு இணைந்து நடைபெற்றது. கட்டட எழிற்கலைத்துறை மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மாதிரி கிராமிய வீடு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  

இறுதியாக அமைப்பு செயலாளர் யுவ.தேவிசிறீ (இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர்) நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment