செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

செய்திச் சுருக்கம்

பதிவேடு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணிப் பதிவேட்டை சரிபார்க்க வரும் 7ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வீரியம்

தமிழ்நாட்டில் கரோனா வீரியம் அதிகரித்தால், ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.

மகளிருக்கு...

மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், வரும் நிதிநிலையறிக்கையில் முதலமைச்சர் அறிவிப்பார் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்.

உயர்வு

நடப்பு 2022-2023 நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தனி ரசீது

நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை இன்று (1.1.2023) முதல் முறையாக 2 ரசீது அடித்து வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உத்தரவு.

போராட்டம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து 2023ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு.

தடுப்பூசிகள்

2022ஆம் ஆண்டு டிசம்பர் 30 வரை மொத்தம் 220.09 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்கள் ஆகும். 22.30 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் (பூஸ்டர் தடுப்பூசி) அடங்கும்.

வழக்குகள்

கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தகவல் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் 69.598 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில் 59,57,704 வழக்குகளும் மாவட்ட துணை நீதிமன்றங்களில் 4,28,21,378 வழக்குகளும் நிலுவை யில் உள்ளன.


No comments:

Post a Comment