இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள்: அமைச்சர்கள் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள்: அமைச்சர்கள் ஆய்வு

காஞ்சிபுரம், ஜன. 4-- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 433 தொகுப்பு வீடுகள் 5 ஒன்றியங்களில் கட்டப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சி யில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் மற்றும் சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகள், காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டு குளம் ஊராட் சியில் 58 குடியிருப்புகள், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், திருப்பெரும் புதூர், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப் புகள் மொத்தம் 443 குடியிருப்புகள் 19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை அமைச்சர் அன்ப ரசன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அமைச்சர் அன்பரசன் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்காக, 443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று, 2020-2021-ஆம் ஆண்டில் நிதி அறிக்கை, அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். அந்த வகையில், இந்த வீடு கட்டும் திட்டம், ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரு கின்றன. 50 சதவீதம் பணிகள் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்குள் முடிவடையும். மற்ற பகுதிகளிலும் விரைவாக கட்டி முடிக்கப்படும்.

2021_-2022ஆம் ஆண்டில் அறிக்கை யில் 50 கோடி மதிப்பில், ஆயிரம் வீடு கள் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆதி திராவிட நலத்து றையின் சார்பாக, இயங்கிவரும் பள் ளிக்கு நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இவை கட்டடங்களுக்காகவும், கழிப்பறைக்காகவும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அதிகபடியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை செய்து முடிக்கப்பட்டு வருகின்றன. தற்பொ ழுது முடிக்கப்படாத பணிகள் அடுத்தடுத்த ஆண்டுகள் செயல்படுத்தப் பட்டு வரும். இந்த ஒதுக்கீடு கட்டடங்களுக்காகவும், கழிப்பறைக் காகவும் செயல்படுத்தப்பட்டு வரும். இதேமாதிரி, அனைத்து பள்ளிகளும், விடுதிகளும் சரி செய்யப்படும்.

மேலும் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப் பவை உயரம் ஏற்றி கட்டப்படும். தரப்படும் நிதியை பொறுத்து, இவை கட்டி முடிக்கப்படுகின்றன.

அதைத்தவிர, பள்ளியில் பள்ளி கட்டடம் ஆரம்பிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக வருகிற நிதியில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பாக இயங்கிவரும் பள்ளிக்கு அதிகபடியான நிதியினை கேட்டுப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப் படும். ஆதிதிராவிட பள்ளிகளுக்கு 192 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனம் செய்வ தற்கும் நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். 

No comments:

Post a Comment