அதானி நிறுவன ஊழல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

அதானி நிறுவன ஊழல்

உலக கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்து இருக்கும் அதானி நிறுவன ஊழல் தான்.

மூணு வருசத்துல அதானி கம்பெனிகளுடைய பங்கு மதிப்பு சராசரியா 819% அதிகமாயிருக்காம்.

அதானி குரூப் பற்றிய மொத்த தகவலும் புட்டுப்புட்டு வச்சிருக்கு Hindenburg Research Report.

படிச்சு முடிச்சுட்டு சுருக்கமா எழுதலாம்னு நானும் அறிக்கையைப் படிக்கிறேன் படிக்கிறேன் படிக்கிறேன்.... படிச்சுட்டே இருக்கேன், தீர மாட்டேங்குது. 

கடைசியில, வினோத் அதானி அல்லது அதானிக்கு நெருக்கமான கூட்டாளிகளால் இயக்கப்படும் 38 மொரிஷி யஸ் ஷெல் கம்பனிகள் பட்டியலும் இருக்கு. 

இதில் பெரும்பாலான நிறுவனங்கள் என்ன செய்யு துன்னே தெரியாது. அதில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் தெரியாது. அட்ரசும் கிடையாது. டெலிபோன்கள் கிடையாது. இணையத்திலும் தகவல்கள் கிடையாது. ஆனா, பல்லாயிரம் கோடி டாலர் பணத்தை அந்தக் கம்பெனிகள் இந்தியாவில் அதானி கம்பெனிகளுக்கு மாத்தி விட்டிருக்காம்.

SEBI-ன்னா ஏதோ பெரிசா நினைச்சுட்டிருக்கோம். ஆனா அது சும்மா வேடிக்கை பாத்துட்டிருக்கு போல. தப்பு செய்தவனை தண்டிக்கிறதுக்கு பதிலா SEBI அவனைக் காப்பாத்தறதுலதான் பிசியா இருக்கு போல... அப்படீன்னு நான் சொல்லலே. ரிப்போர்ட் சொல்லுது. 

ஒரு பக்கம், ஆட்சியை பிடிக்க இந்த காவி பாவிகள் சிறுபான்மை இன மக்களுக்கு பண்ணிய கொடுமைகளை BBC படம் பிடிச்சு வெளியிட்டு போட்டு கிழிக்கறான்னா , இன்னொரு பக்கம் ஆட்சிக்கு வந்த பின் இவர்கள் பண்ற ஊரை அடித்து உலையில் போடும் கார்போரேட்டுக்கு கால் கழுவி விடும் கைக்கூலி வேலைய Hindenburg Research  சல்லி சல்லியா போட்டு நொறுக்கி இருக்கிறான்.

இதில இன்னும் சிறப்பு என்னன்னா கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல அதானி குழுமத்தின் பங்குகளில் LIC மற்றும் STATE BANK OF INDIA  மிகப் பெரும் அளவிலான மக்கள் பணத்தை முதலீடு செய்து இருக்கின்றன என்பதுதான். அதனால் பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகளின் விலை வீழும்போது ஸ்வாஹா ஆகப் போவது பொது மக்களான நம்முடைய பணம்தான்.

ஒரே நாளில் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தை களில் கடும் சரிவை சந்தித்து சுமார் 50,000 கோடி ரூபாயை இழந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானியின் பொய் கணக்குகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால் அதானி குருப்புக்கு இன்று 50 ஆயிரம் கோடி இழப்பு, அதில் முதலீடு செய்துள்ள LIC யின் பங்கும் சரிய ஆரம்பித்து இருக்கு.தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி50 0.08% (12.5 புள்ளிகள்) ஏற்றம் கண்டு 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

ஆனால் அதானி குழும நிறுவன பங்குகள், இந்த சந்தை சூழலுக்கு பொருந்திப் போகாமல் கொஞ்சம் அதிகமாகவே விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

23, 24 வயசு சின்ன பசங்க ஆடிட் பண்ணி அதானிக்கு கிளியரன்ஸ் கொடுத்து இருக்கானுங்க .. என்ன ஒரு பிராடுத்தனம் பாருங்க!

ஒண்ணுமே இல்லாத போபோர்ஸ் பிரச்சினையை ஊழல் என்று கூவிக் கூவி பெரிதாக்கி காங்கிரசை ஆட்சி யில் இருந்து அகற்றியவர்கள் இந்த உலக மகா யோக்கி யர்கள். ஓட்டுக்கு ராமர். வாங்கி தின்ன அதானி. இதுதான் பாஜக. இப்போது இவர்களின் யோக்கியதை இப்படி ஊரெல்லாம் நாறிப் போன பின்பும் எப்படி ‘பாரத் மாதா கீ ஜெய்'னு கத்திக்கிட்டு மக்களை ஏமாத்திகிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறாங்கனு தெரியல!🤨

ஒட்டு மொத்தமா நாட்டையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தப் போகிறார்கள்  என்பது மட்டும் உறுதி.

தகவல்: சமூக வலைத்தளத்திலிருந்து கோ.கருணாநிதி


No comments:

Post a Comment