காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம் பாதுகாப்பு குறைபாட்டால் இடையில் நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம் பாதுகாப்பு குறைபாட்டால் இடையில் நிறுத்தம்

 


சிறீநகர்,ஜன.28-
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் நடைப் பயணம், தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. 26.1.2023 அன்று குடியரசு தினத்தையொட்டி, விடுமுறை விடப்பட்டிருந்தது.

நேற்று (27.1.2023) காலை பனிஹல் என்ற இடத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கியது. ராகுல்காந்தியுடன் நூற்றுக்கணக் கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.

காஷ்மீர் மேனாள் முதல மைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப் துல்லாவும், பயணத்தில் கலந்து கொண்டார். ராகுல்காந்தியை போலவே அவரும் வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்தார்.

உமர் அப்துல்லா செய்தியா ளர்களிடம் கூறுகையில், ''நாட்டின் நற்பெயர் மீது உள்ள கவலையால் நடைப்பயணத்தில் பங்கேற்கிறேன்'' என்றார். தொடர்ந்து நடந்த நடைப் பயணம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காசிகுண்ட் என்ற இடத்தை அடைந்தது. அப்போது, ராகுல்காந்திக்கான வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இடம்பெற்றிருந்த காஷ்மீர் காவல் துறையினரைக் காணவில்லை.

இதனால், கூட்டத்தை கட்டுப் படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டி ருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல்காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார். இரவு தங்க திட்டமிட்டு இருந்த அனந்தநாக் மாவட்டம் கானாபாலுக்கு போய்ச் சேர்ந்தார். நடைப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ராகுல்காந்தி நேற்று காலையில் 11 கி.மீ. தூரம் நடக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், வெறும் அரை கி.மீ. நடந்தவுடனேயே பாதுகாப்பு குளறுபடியால் நடைப்பயணம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:-

நடைப்பயணத்தில் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் கெட்ட வாய்ப்பாக முற்றிலும் சீர் குலைந்தன. கூட்டத்தை கட்டுப் படுத்த வேண்டிய காவல்துறையினரை எங்குமே பார்க்க முடிய வில்லை. எனது பாதுகாப்பு குழு வின் முடிவுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. எனவே, நடைப்பயணத்தை ரத்து செய்தேன். பாதுகாப்பு வழங்க வேண்டியது காஷ்மீர் நிர்வாகத் தின் பொறுப்பு. மீதி உள்ள நாட் களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

நடைப்பயணத்திற்கு காவல் துறை பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டது. இதனால் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. இதற்கு உத்தரவிட்டது யார்? இந்த குறைபாட்டுக்கு காரணமான அதி காரிகள் பதில் அளிக்க வேண்டும். ராகுல்காந்தியின் பாதுகாப்புடன் அதிகாரிகள் விளையாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் நடைப்பயணம், 30ஆம் தேதி நிறைவடைகிறது. மீதியுள்ள நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுமுகமாக மேற் கொள்ளக்கோரி காஷ்மீர் நிர்வா கத்துடன் ராகுல்காந்தி பாதுகாப்பு குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

No comments:

Post a Comment