ராமர் கோயில் திறப்பு பற்றி பேச அமித்ஷா யார் அந்த கோயிலின் பூசாரியா அல்லது சாமியாரா? றீ?காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

ராமர் கோயில் திறப்பு பற்றி பேச அமித்ஷா யார் அந்த கோயிலின் பூசாரியா அல்லது சாமியாரா? றீ?காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

சண்டிகர், ஜன.8- “அயோத் தியில் ராமர் கோயில் எந்த  தேதியில் திறக்கப்படும் என் பதை அறி விக்க நீங்கள் என்ன அந்தக் கோயிலின் பூசாரியா?” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.  

திரிபுராவில் விரைவில் தேர்தல் வர வுள்ள நிலையில், அங்கு ‘ஜன விஸ் வாஸ்’ என்ற பாஜகவின் ரத யாத்திரையை துவங்கி வைத்துப் பேசிய அமித்ஷா, தற் போது அயோத் தியில் கட்டப் பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோயில், 2024  ஜனவரி 1-ஆம் தேதி பக்தர்களின் தரி சனத்துக்காக தயாராகி விடும். இதை திரிபுரா வில் இருந்தபடி ராகுல்காந் திக்கு கூறிக் கொள்கிறேன் என்று கூறினார். 

இந்நிலையில், அரியானா வில் நடை பெற்று வரும், ராகுல் காந்தியின் நடைப்பயண பிரச்சாரத்தின்போது, மல்லி கார்ஜூன கார்கே பேசிய தாவது: 

பாஜக யாருக்காக அரசியல் செய்கி றது என்ற குழப்பம் வெகுநாட்களாக எனக்கு இருக்கிறது. மக்களுக்காக பணி யாற்ற வேண்டிய ஒரு அரசியல் கட்சி, கோயில்களுக்காக தொடர்ந்து பணி யாற்றி வரு கிறது. ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்றால், அரசியல் கட்சித் தலைவர்கள் எதைப் பற்றி பேச வேண்டும்? அந்த மாநிலத்தில் செய்யப்பட்டிருக் கும் நலத்திட்டங்களை பற்றி பேச வேண்டும். ஆனால், திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது குறித்து பேசியிருக்கிறார்? நான் தெரியாமல்தான் கேட் கிறேன்.. அயோத்தி ராமர் கோயில் திறப்பை பற்றி பேசுவதற்கு நீங்கள் (அமித் ஷா) என்ன அந்தக் கோயில் பூசாரியா? சாமியாரா? அதுவும் தேர்தல் நேரத்தில் ராமர் கோயில் திறப்பு பற்றி பேசுவதற்கு என்ன காரணம்? 

உங்கள் வேலை என்ன?

நீங்கள் ஒரு உள்துறை அமைச்சர். உங்கள் வேலை என்ன? நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட் டுவது. இதுதானே உங்களின் வேலை. அந்த வேலையை முத லில் சரியாக பாருங்கள். அதை விட்டுவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை பற்றி பேசுவதற்கு நீங்கள் யார்? அதை கோயில் நிர்வாகிகள் பார்த்துக் கொள்வார்கள்.  நாட்டில் இப்போது எவ் வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. கோடிக்க ணக்கான படித்த இளைஞர்கள் வேலை  இல்லாமல் இருக் கிறார்கள். அத்தியா வசியப் பொருட்களின் விலை விண்ணை  தொட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள் ளது. ஆனால், என்றாவது பிரதமர் மோடி யும், அமித் ஷாவும் இவற்றைப் பற்றி பேசி  இருக் கிறார்களா? கிடையாது. ஏனெனில்,  மக்கள் பிரச்சினை களைப் பற்றி அவர் களுக்கு அக்கறை இல்லை. தேர்தல் மட்டும்தான் அவர்களின் குறி. தேர்தல் நேரத்தில் எதைக் கூறி மக்களைத் திசைத் திருப்பலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியை எப்படி கவிழ்க்க லாம் என்பது பற்றிதான் அவர் களுக்கு கவலையாக உள்ளது.

பிரிவினைவாத அரசியலில்...

ராகுல் காந்தியின் தலை மையில், காங்கிரஸ் கட்சி பல் வேறு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் பாஜக, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கங்களை கவிழ்க்க, பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது. அவர்கள் தங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கூறிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கங்களை கவிழ்க்கின்றனர். இப்போதும், அவர்கள் கட வுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொய்களைப் பரப்பு கின்றனர். இந்த அரசாங்கம் பொய்களின் அரசாங்கம்.  இந்த அரசாங்கம் இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றது. உங் களுக்கு (மக்களுக்கு) வேலை கிடைத்ததா?, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவதாக சொன் னார்கள். அந்தப் பணம் கிடைத்  ததா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்றார்கள். விவ சாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என் றார்கள். இவையாவது நிறைவேறியதா? எதுவும் நடைபெறவில்லை. அவர்கள், வார்த்தை களில் ராமரையும் கைகளில் கத் தியையும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் பிரிவினைவாத, வாக் குவங்கி அரசியலில் ஈடுபடு கிறார்கள். இவ்வாறு மல்லிகார் ஜூன கார்கே பேசியுள்ளார்.


No comments:

Post a Comment