காஷ்மீரில் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 1, 2023

காஷ்மீரில் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் பாதிப்பு

சிறீநகர்,ஜன.1- நாட்டில் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் ஆடம்பரம் என்றாகிவிட்டன என்று உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர்  மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது:- 

இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்த அடிப்படை உரிமைகள் தற்போது ஆடம்பரம் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. . அரசியல், சமூகம், மதம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படுபவர்களுக்கு மட்டுமே இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன. சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment