ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 29.1.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

றீ டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வேலை வாய்ப்பு, பொருளாதார சரிவு குறித்து ஒன்றிய அரசு செயல்படாமல், பெயரை மாற்றும் வேலை ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி.

தி இந்து:

றீ மகாராட்டிராவில் பழங்குடி மக்களான பன் ஜாராக்களை ஹிந்துக்களாக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி. பஞ்சாராக்கள் எப்போதும் ஹிந்துக்கள் என்று கூறுபவர்களுக் கும், ஆர்.எஸ்.எஸ் பழங்குடியின வரலாற்றைத் திரித்து பாஜகவின் வாக்கு வங்கியைப் பெருக்க முயல்வதாகவும் பஞ்சராக்கள் சமூகம் பிளவுபட்டுள்ளது.

றீ ஜாதி ஹிந்துக்களிடமிருந்து பல கோவில்களில் நுழைவதற்கும், வழிபடுவதற்கும், திருவிழாக்களில் பங்கு பெறுவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முயலும் பெரிய மற்றும் சிறிய போராட்டங்களை தமிழ்நாடு தொடர்ந்து கண்டு வருகிறது என்கிறார்கள் கட்டுரையாளர்கள் பொன்.வசந்த் , உதவ் நாயக்

டைம்ஸ் ஆப் இந்தியா:

றீ அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து எல்.அய்.சி.யின் பங்கு மதிப்பு ரூ.77 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.53 ஆயிரம் கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல, எஸ்.பி.அய். வங்கியின் சந்தை மூலதனம் ரூ.54,618 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வகையில்ரூ.78,118 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி, சிபிஅய், செபி, அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய நிதி அமைச்சர் ஆகியோர் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்?’’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment