தங்க குணம்: குப்பையில் கிடந்த தங்க நகையை உரிய நபரிடம் அளித்த தூய்மைப்பணியாளர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

தங்க குணம்: குப்பையில் கிடந்த தங்க நகையை உரிய நபரிடம் அளித்த தூய்மைப்பணியாளர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார். இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1லு பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார். அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார். அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


No comments:

Post a Comment