பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 31, 2023

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பின் விருது வழங்கும் விழா

திருச்சி, ஜன. 31- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித் தோழர்களின் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் 27.01.2023 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்றது. 

இவ்விழாவில் பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிய பணித் தோழர்களுக்கு பெரியார் கல்விக்குழுமத்தின் பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 இவ்விழாவில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப் பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை யாற்றினார். பெரியார் மருந்தி யல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேரா. எம். செண்பக வள்ளி, பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலவர் மரு. பி. மஞ்சுளா வாணி மற்றும் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் முனை வர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை இணை பேராசிரியர் முனைவர் காசி. மாரியப்பன் “தந்தை பெரியாரும் மொழிக்கொள்கையும்” என் னும் தலைப்பில் சிறப்புரையாற்றி னார். 

மானுடப் பற்று மட்டுமே

அவர் தமது உரையில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பதைக் கடந்து மானுடப்பற்று என்பதை மட் டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் என்றும் அத்தகைய தலைவரின் பெயரில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய பணித் தோழர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங் கள் மற்றும் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கு விருது வழங் குதல் போன்ற நிகழ்ச்சிகளை காணும் போது மற்ற கல்வி நிறுவனங்களுக்கு முன் மாதிரி யாக பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் செயல்படுவதாக கூறினார். மேலும் தமிழன் மொழி உணர்வின்றி தமிழ் மொழியை புறக்கணித்து அரு வருக்கத்தக்க அர்த்தங்களை வழங்கக்கூடிய சமஸ்கிருதப் பெயர்களை சூட்டுவது உண்மையிலேயே நம் இனத்திற்கு செய்யக் கூடிய மிகப்பெரிய அநீதி என் றும் அழகிய தமிழ் பெயர்களை சூட்டுவதே தமிழினத்திற்கு பெருமை என்றும் உரையாற்றி பணித்தோழர்களுக்கு விருது களை வழங்கி சிறப்பித்தார். 

சமூகப் போராளி விருது

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மற்றும் சனவரி மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கல்வி நிறுவன பணியாளர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண் டாடப்பட்டது. விருது வழங்கி, பாராட்டப்பட்ட பணித் தோழர்கள் பெரியார் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண் டனர். 

இவ்விழாவில் தமிழர் தலைவர் நிறுவனத் தலைவரின் 90ஆவது பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட் டோர் நலக் கூட்டமைப்பின் சார்பில் வழங்கிய “சமூகப் போராளி விருது” மற்றும் திரா விடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர் களுக்கு  “தமிழ்நாடு அரசு வழங் கிய தந்தை பெரியார் விருது” போன்றவற்றிற்காக பணித் தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கி கூட்டமைப்பின் சார்பில் பெருமையுடன் 

நிகழ்ச்சி கொண்டாடப்பட் டது. நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மருந்தியல் கல்லூரி யின் மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் வி. கவிதா நன்றி யுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment