விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர்கழித்த பார்ப்பனருக்கு அமெரிக்கா தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 8, 2023

விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர்கழித்த பார்ப்பனருக்கு அமெரிக்கா தடை

புதுடில்லி, ஜன.8   சங்கர் மிஸ்ரா என்பவர் நியூயார்க்-கிலிருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தன்னோடு பயணம் செய்த 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்தார்  இவனுக்கு இந்திய நிர்வாகங்களான ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பு கொடுத்த தண்டனை வெறும் 30 நாளுக்கு எந்த விமான பயணமும் மேற்கொள்ள தடை மட்டும்.

அமெரிக்காவிலிருந்து இவர் ஒரு மாதம் விடுமுறையில் வந்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த 30 நாள் தண்டனைக் காலத்தை இந்தியாவில் விமான பய ணத்தை மேற்கொள்ளாமல்  கழித்து விட்டு அமெரிக்கா போய்விடலாம் என்பது இவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. இவர் படம் பெயரைக் கூட வெளியே விடாமல் பார்த்துக் கொண் டனர். காரணம் சங்கர் "மிஸ்ரா" ஒரு பார்ப்பனர்.  இந்த பார்ப்பனரின் பெயர் மற்றும் அவரது ஒளிப்படத்தை அமெ ரிக்க செய்தி நிறுவனம் டுவீட்டர் பக்கத் தில் வெளியிட்ட பிறகு இங்குள்ளவர்கள் அந்த செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பதிவை நீக்க மிரட்டி னார்கள்.

இதை அறிந்த அவர் வேலை செய்த அமெரிக்க நிறுவனமான வேல்ஸ் பர்கோ இவரை துணைத்தலைவர் பணியிலிருந்தே தூக்கி விட்டது. சிறுநீர் கழிப்பதும், மாட்டு மூத்தி ரத்தை குடிப்பதும் உங்கள் நாட்டில் புனிதமாக இருக்கலாம். எங்க ஊரில் இதை யெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் நீ வேதிக்  இந்தியாவிலேயே இருந்துகொள் என கூறி விட்டது.

சில மாதங்களுக்கு முன்பு நகைச் சுவை நடிகர் குனால்கம்ரா என்பவர் தன்னுடன் விமானத்தில் பயணம் செய்த  மோடியின் பேரன்பைப் பெற்ற அர்னாப் கோஸ்வாமி ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசுவதாக அவரிடம் நகைச்சுவையாகத் தான் பேசினார். உடனே அவர்  விமான நிறுவனத்தில் எனது நிம்மதியைக் கெடுத்துவிட்டார் என்று புகார் கொடுக்க இந்திய விமான போக்கு வரத்து நிறுவனம் நகைச்சுவை நடிகர் குனால் கும்ராவிற்கு 6 மாதம் விமா னத்தில் பறக்க தடைவித்தது. ஏனென் றால்  அர்னாப் கோஸ்வாமி பார்ப் பனர் இங்கே . சங்கர் மிஸ்ராவிற்கு பதில் மிர்ஸா என இருந்திருந்தால்? மொத்த இசுலாமிய சமுதாயத்தையும் குற்றவாளிஆக்கி இருப்பார்கள். இஸ் லாமியர்கள் விமானத்தில் செல்லக் கூட தடைவிதித்திருப்பார்கள்.


No comments:

Post a Comment