சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல்


 செங்கல்பட்டு,ஜன.11- செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 6.1.2023 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் சிங்க பெருமாள் கோயில் இளங்குயில் மழலையர் பள்ளியில் நடை பெற்றது. 

இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந் திரன் முன்மொழிய மாவட்டச் செயலாளர் அ. செம்பியன் வழி மொழிய ஒன்றிய கழக தலைவர் மா நரசிம்மன் தலைமை வகித்தார்.  மறைமலை நகர் நகர செயலாளர் ப. முருகன் வரவேற்புரை ஆற்றி னார், மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு இரா. குணசேகரன் விளக்க உரையாற்றினார், அதன் பிறகு ப.க. மாவட்ட செயலாளர் மு.பிச்சை முத்து, ப.க. மாவட்ட தலைவர் அ. சிவக்குமார், வள்ளுவர் மன்றம் செயலாளர் மா. சமத்துவமணி, மறைமலைநகர் நகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன், பக மாவட்ட ஆசிரியரணி சே.சகாய ராஜ், திமுக பகுத்தறிவு இலக்கிய அணி ஒன்றிய பிரபு, பெரியார் நவீன் மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் அ. செம்பியன், பொதுக்குழு உறுப்பினர் அ. பா. கருணாகரன், மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், மண்டல தலை வர் பு. எல்லப்பன் ஆகியோர் கருத் துரைக்கு பின் மாநில அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சமூக நீதி பாதுகாப்பு, திரா விட மாடல் விளக்க பரப்பரை  மேற்கொண்டு 10.2. 2023 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சிங்கபெருமாள் கோவில் வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு மிகச் சிறப்பாக வர வேற்பு அளிப்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது 

2. தொடர் பரப்புரை மேற் கொண்டு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களின் சிங்கபெரு மாள் கோவில் தேதி தந்தமைக்கு கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

 3. சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை கூட்டத்தை விளக்கி சுவரெழுத்து, தட்டி விளம்பரம், சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது கூட்டத் தில் மு .அருண் மாவட்ட இளைஞரணி செயலாளர் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment