அ.தி.மு.க. இரு குழுவினரும் பா.ஜ.க. வாசலில் காத்துக்கிடப்பதா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

அ.தி.மு.க. இரு குழுவினரும் பா.ஜ.க. வாசலில் காத்துக்கிடப்பதா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி


இளம்பிள்ளை, ஜன. 29-
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு வரும் சுயமரியாதையை மறந்து கமலாலய வாச லில் காத்துக்கிடக்கிறார் கள் என்று சேலத்தில் நடந்த விழாவில் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருமணம்

சேலம் மாவட்டம் நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்- விஜயா இணையரின் மகனும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞர் அணி செயலாளர் மணிகண்டனின் தம்பியு மான டாக்டர் பூபதிக் கும், தர்மபுரி மாவட்டம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் காளியப்பன்- காந்திமதி இணையரின் மகள் டாக்டர் அனிதா வுக்கும் அஞ்சகாட்டில் ஜெயமுருகன் இல்லத்தில் 27.1.2023 அன்று காலை திருமணம் நடந்தது.

திருமண விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுதிருமணத்தை நடத்திவைத்தார்.

மிகப்பெரிய வெற்றி

மணமக்களை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்ட சபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கி றது. அமைச்சர் நேரு பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். அவர் மிகப் பெரிய வெற்றியை பெற் றுத் தருவார். சட்டசபை தேர்தலில் நாம் கோட்டை விட்டு விட்டோம். நாடா ளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தருவீர்கள் என்ற நம் பிக்கை உள்ளது.

கலைஞரும், தமிழும் போல மணமக்கள் வாழ வேண்டும். நம்முடைய தலைவரும், அவருடைய உழைப்பும் போல மண மக்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். 

சுயமரியாதை

நான் மணமக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள் கிறேன்.

எடப்பாடி பழனி சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆட்சியில் இருக் கும் வரை ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் என்று இருந்தனர். ஆட்சி முடிந் தது. இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்றனர். சட்ட சபையில் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். ஆனாலும் ஒருவருக்கொ ருவர் பேசிக்கொள்ள மறுக்கிறார்கள். அவர் கள், சுயமரியாதையை மறந்து கமலாலய வாச லில் புதுடில்லி சிக்னலுக் காக சுயமரியாதையை மறந்து காத்து கிடக்கி றார்கள் என்றார்.

பின், மணமக்கள் இரு வரும் மருத்துவம் படித்த வர்கள். எந்த காலகட்டத் திலும் சுய மரியாதையை விட்டுக் கொடுக்காதீர் கள். என்ன வேண்டுமோ, அதை கேட்டு ஒரு புரித லோடு வாழ வேண்டும். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், மற்ற இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடி யாக திகழக்கூடியவர். அவரையும் இந்த நேரத் தில் நான் பாராட்டுகி றேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment