புகையிலை பொருட்கள் மீதான தடை நீக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

புகையிலை பொருட்கள் மீதான தடை நீக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சென்னை, ஜன. 29-
குட்கா, பான்ம சாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள் களுக்கு தடைவிதித்த உணவு பாது காப்பு ஆணையரின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய் ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன் றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப் பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், "உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணை யரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தி ருக்கிறது. உணவுப் பாது காப்பு மற்றும் தரச்சட்டம், 2006 இன் பிரிவு 30(2)(ஏ)இன் கீழ் தமிழ் நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையி லைப் பொருள்களுக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணைய ரால் ஆண்டுதோறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரு கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் குட்கா, பான் மசாலா விற்பனையா ளர்கள், மொத்த வியாபாரிகள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப் பட்டு, இந்த உத்தரவை மீறிய நிறுவனங்க ளுக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

தற்போது, இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு அத னுடைய தீர்ப்பில், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப் பட்ட உணவுப் பாது காப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகை யிலையை உணவுப் பொருளாக சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள் கள் விளம் பரப்படுத்த தடை மற் றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில், புகை யிலைப் பொருள்களை விளம்பரப்படுத் துவதையும், முறைப்படுத்துவதைப் பற்றியும்தான் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழி வகை செய்யவில்லை என்னும் கருத்து தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதி மன்றம் தற்போது ரத்து செய்துள் ளது. எனினும், அதே தீர்ப்பில் புகையிலையை உணவுப் பொரு ளாக சுட்டிக் காட்டப்பட்டுள் ளது. நாடு முழுவதும் உச்ச நீதிமன் றத்தின் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் இந்த விதிமுறையின் கீழ்தான் தடை உத் தரவை பிறப் பித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரு கிறது. குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வாய் புற்றுநோய்க்கான முதன்மை காரணம் ஆகும்.

உச்ச நீதிமன்ற சட்ட நிபுணர் களுடன் கலந்தாலோசித்து, அரசு உயர் நீதிமன் றத்தின் உத்தரவுக்கு எதிராக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய் துள்ளது. 

அதே நேரத்தில் தடை யின் தொடர்ச்சியை உறுதி செய்வ தற்காக தற்போதுள்ள சட்டம்/விதிகளில் திருத்தம் செய்யலாமா அல்லது புதிய சட்டத்தை இயற்று வதா என்பதையும் சட்ட வல்லுநர் களுடன் ஆய்வு செய்து வருகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. 

No comments:

Post a Comment