சேதுக் கால்வாய் என்ற "தமிழன் கால்வாய்" செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

சேதுக் கால்வாய் என்ற "தமிழன் கால்வாய்" செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக்கூட்டம்

சென்னை, ஜன. 4- தமிழ்நாட்டின் தென் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப்பகுதியிலுள்ள துறை முகங்களிலிருந்து கொச்சி, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் மேற்கு பகுதிகளிலுள்ள துறை முகங்களுக்கு கடல்வழிப்பயணம் மேற் கொள்ள அண்டை நாடான இலங்கையைச் சுற்றியே செல்லும் நிலை உள்ளது. அதனால், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட கப்பல் பயணத்தில் பயண நேரம், பயணத் தொலைவு அதிகரித்து மிகுந்த பொருளாதார சுமை ஏற் படுகிறது.  இந்தியா, இலங்கையை இணைக் கின்ற பாக் நீரிணைப்பு வழியே கப்பல் செல் லும் நிலை ஏற்பட்டால் மிகுந்த பொருளாதார சேமிப்பும், பல்வேறு தொழில்வாய்ப்புகளுடன் துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும் வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், வீணான பொருளாதார விரயங்கள் தவிர்க்கப்படும். 

சேது சமுத்திரத்திட்டம் சுமார் 150 ஆண்டு காலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு தமிழ்நாடு தொடர்ச்சி யாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இராமாயண புராணக் கதையின்படி இராமன் பாலம் இந் துத்துவா மதவெறி, அரசியல் காழ்ப்புணர்வு கள் உள்ளிட்ட காரணங்களால் சேது சமுத் திரத்திட்டம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தடை போடப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. இன்னமும் தடை நீக்கப்படவில்லை. தடை நீங்கி சேது சமுத்திரத்திட்டம் நிறை வேற்றப்பட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உறுதுணையாக அனைவரும் இருக்கவேண்டும் என்று நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டம் நேற்று (3.1.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது. தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் வரவேற் புரை ஆற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று சேது சமுத்திரத் திட்டம்குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், அதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகத்தின் பங்குபணிகள், மாநாடு களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொண்ட சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு வரலாற் றுப்பூர்வமான தகவல்களை எடுத்துரைத்தார். அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்கள வையில் கார்த்திகேய சர்மா எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அரசின் அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலுரையில், இராமன் பாலம் என்று ஏதும் கிடையாது என்று அறிவியல் விளக்கங்களை குறிப்பிட்டுள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றங்கள், சட்டமன்ற, நாடாளுமன் றங்களைவிட மக்கள் மன்றம்தான் செயல் படுத்திட வேண்டும் என்று திராவிடர் கழகம் தந்தைபெரியார் காலந்தொட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அரசமைப்புச்சட் டத்தின் முதல் திருத்தம், எம்.ஜி.ஆர். ஆட்சி யில் 9ஆயிரம் வருமான வரம்பு எதிர்ப்பு ஆகியவற்றை கழகம் மக்களிடையே கொண்டு சென்றது. வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு சுற்றுப்பயணத்தின்மூலம் சேது சமுத் திரத்திட்டம் குறித்து மக்களிடையே பரப் புரையை தமிழர் தலைவர் செய்தார். அந்த வகையில், சேது சமுத்திரத்திட்டம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். அறிவியல் வளர்ந்துள்ள காலத்தில் புராணக்குப்பைகளைக் காட்டி ராமன் பாலம் என்று முடக்கப்பட்டது. நீதிமன்றமும் அதற்கு துணைபோனது என்று குறிப்பிட்டார்.

இனியும் அத்திட்டம் தாமதமின்றி உடன டியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அனைத்துக்கட்சித் தலைவர் கள் பங்கேற்கும் திறந்த வெளிமாநாடு திரா விடர் கழகம் சார்பில் மதுரையில் 27.1.2023 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முதல்படி யாக நேற்று (3.1.2023) நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அமைந்துள்ளது.

புத்தகம் வெளியீடு

சேது சமுத்திரத் திட்டம் குறித்து திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய புத்தகங்கள் நன்கொடை மதிப்பு ரூ.250. சிறப்புக்கூட்டத்தில் சிறப்பு சலுகையாக ரூ.50 கழிவுடன் ரூ.200க்கு வழங்கப்பட்டது.

புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் ஆ.வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து ஏரா ளமானவர்கள் வரிசையில் நின்று புத்தகங் களைப் பெற்றுக்கொண்டனர்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், தமிழக மூதறி ஞர் குழு பொருளாளர் பொறியாளர் முனை வர் த.கு.திவாகரன், விழிகள் பதிப்பகம் வேணு கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, கரிகாலன்,  மாணிக்கம், பொ.நாக ராஜன், கோ.நாத்திகன், க.இளவரசன், வழக்கு ரைஞர் அருண், இராமச்சந்திரன், சவரியப்பன் உள்பட ஏராளமானவர்கள் தமிழர் தலைவ ரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஒன்றிய அரசின் செயலகப் பணி (ஓய்வு) செ.வேலுமணி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

சிறப்புரை

ஒன்றிய அரசின் செயலகப் பணி (ஓய்வு) செ.வேலுமணி, கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை நிறைவுரை ஆற்றினார். சேது கால்வாய் என்ற தமிழன் கால்வாய்ப் பணியை செயல்படுத்தி முடித்திட அனைத்துக்கட்சியினரை ஒருங்கிணைத்து மக்களிடையே பிரச்சாரம் தீவிரமாக செய்யப்படும். தேவைப் பட்டால் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் நன்றி கூறினார்.

திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப் புரை வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

பொருளாளர் வீ.குமரேசன், சேது சமுத் திரத்திட்ட கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட வரும், பணி ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதி காரியுமான கே.சுரேஷ், அமைப்புச் செயலா ளர் வி.பன்னீர் செல்வம், புலவர் வெற்றிய ழகன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, பெரியார் களம் இறைவி, த.மரகதமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, பெரியார் மாணாக்கன், நா.பார்த்திபன். கி.இராமலிங்கம், சா.தாமோதரன், தமிழ்செல்வம், கோ.வீ.ராகவன், அம்பத்தூர் நடராஜன், மயிலை பாலு உள்பட பலரும் கலந்து கொண் டனர்.


No comments:

Post a Comment