பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்

பழநி, ஜன. 22- கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்தி ரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி முரு கன் கோயில் குடமுழுக்கு ஜன. 27இல் நடைபெறு கிறது. முருகன் தமிழ்க் கடவுள். இதனால் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓதப் பட வேண்டும். தமிழ் நாட்டில்  கோயில் குட முழுக்கில் தமிழில் மந்தி ரம் ஓத வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை 2020இல் உத்தர விட்டுள்ளது. சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பழநி முருகன் கோயிலுக்கும் பொருந்தும். எனவே பழநி முருகன் கோயில் குட முழுக்கின்போது தமிழில் மந்திரம் ஓத உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ண குமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் வாதிடும் போது, தமிழ்க் கடவுள் முருகன். இதனால் தமி ழில் குடமுழுக்கு நடத் துமாறு கேட்க வேண்டிய தில்லை.

பழநி முருகன் கோயிலில் குட முழுக்கின் போது தமிழில் மந்திரம் ஓத அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரம் ஓதப்படுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment