6 மாநிலங்களில் நிலநடுக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

6 மாநிலங்களில் நிலநடுக்கம்

புதுடில்லி, ஜன. 25- டில்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக் கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்களில் அதிர்வு கள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.

இந்தியாவின் அண்டை நாடான நேபா ளத்தின் சுதர்பாசிம் பகு தியை மய்யமாக கொண்டு நேற்று (24.1.2023) பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகளாக பதிவானது. சுதர்பாசிம் மாகாணத்தின் பஜுரா, கைலாலி, தான்காதி மாவட்டங்களில் நில நடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அப்பகு தியில் ஏராளமான வீடு கள் சேதமடைந் துள்ளன. இதில் ஒருவர் உயிரி ழந்தார்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டில்லி, உத்தரப்பிரதேசம், உத்த ராகண்ட், பீகார், அரி யானா, ராஜஸ்தான் மாநி லங்களிலும் உணரப்பட் டது.  டில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 5.4 புள்ளிகளாக பதிவானது. டில்லியில் சுமார் 30 விநாடிகள் வரை நிலநடுக்கம் நீடித் தது. இதன்காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகள், உயரமான கட்டடங்களில் அதிர்வுகள் நன்கு உணரப்பட்டதால், பீதியடைந்த மக்கள் உடனே வெளியேறி சாலை, தெருக்களில் திரண்டனர். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘டில்லியில் நில நடுக்கம் உணரப்பட்டுள் ளது. மக்கள் அனைவ ரும் பாதுகாப்பாக இருப்பீர் கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். டில்லியை சேர்ந்த அமித் பாண்டே என்பவர் கூறும் போது, ‘‘அடுக்கு மாடி குடியிருப்பின் 5ஆவது தளத்தில் குடியி ருக்கிறேன். என் வீட்டில் நிலநடுக்கத்தை நன்கு உணரமுடிந்தது. வீடு களில் தொங்கவிடப்பட் டிருந்த அலங்கார பொருட்கள் அதிர்வில் அசைந்தன. சுமார் 30 விநாடிகளுக்கு நில அதிர்வு நீடித்தது’’ என்றார். நில நடுக்கத்தின் போது வீடுகளில் அலங்கார விளக்குகள், மின்விசிறிகள் அசைந்தது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலை தளங்களில் அதிக மாக பகிரப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தின் பரேலி, லக்கிம்பூர் கெரி உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட் டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி கட்டடங்களில் இருந்து மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். உத்தராகண்ட் தலைநகர் டேராடூன், சாமோலி, நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. நேபாளத்தை ஒட்டியுள்ள பீகாரிலும், டில்லியை ஒட்டியுள்ள அரியானாவிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. அங்கு தலைமைச் செயலக ஊழி யர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி, சாலையில் குவிந்தனர். டில்லி உட்பட எந்த மாநிலத்தி லும் பொருட் சேதமோ, உயிரிழப்போ ஏற்பட வில்லை. டில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த நவ.12, 29, ஜன.1, 5ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண் டும் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment