சென்னை, ஜன.29 இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஓர் ஆலோசனையை வழங்கி, நன்னடத்தை யோடு இருக்கும் கைதிகளை விடுவிக்க அறிவுறுத்தி இருந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறைச்சாலைகளில் 66 சதவீத சிறைத்தண்டனை அனுபவித்து நன்னடத்தை யோடு இருந்த 60 பேர் நேற்று (28.1.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து 11 பேர், வேலூரில் இருந்து 9 பேர், கடலூரில் இருந்து 12 பேர், திருச்சியில் 9, கோவை யில் 12, மதுரையில் ஒருவர், பாளையங்கோட்டையில் 4, புழல் சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் ஒருவர், கோவை சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் ஒருவர் என மொத்தம் 60 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment