வாழப்பாடியில் தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

வாழப்பாடியில் தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

வாழப்பாடி, ஜன.13  வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்திற்கு (9.1.2023) மேனாள் மாவட்ட தலைவர் வி.சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல இளைஞரணி செய லாளர் வேல் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

மாவட்ட தலைவர் த.வானவில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்திய மூர்த்தி வீரன், மாவட்ட தொழிலாளரணி செய லாளர் மு.மோகன்ராஜ், மு.சங்கர், இரா.சேகுவேரா, கூ.செல்வம்,இரா.கார்முகிலன், இரா.பரமேஸ்வரன், பெ.ராஜா, இசைச் செல்வி, சே.செந்தமிழ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக பொதுக்குழு உறுப்பினர் அமிர்தம் வாழ்த்துரை வழங்கினார்.

கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளை யண்ணன் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் மிக நீண்ட இடை வெளிக்குப் பின் வாழப்பாடி நகரில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டமாக நடைபெறுகிறது இந்த நிகழ்வு என்றால் அய்யா பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் தேவைப்படுகிறார் என்று பொருள்.

இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை மிகச்சிறப்பாக நமது தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். ஆனால் அதற்கு இடையூறாக சில நந்திகள் இருக்கின்றன. அதற்கு இங்கே சில மந்திகளும் துணை போகின்றன‌. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதுதான் மரபு. அதில் அவரது சொந்த கருத்துகளை திணிப்பது, அதில் இடம் பெற்றுள்ள சில வாசகங்களை விடுத்து பேசுவது அதாவது பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், திராவிட மாடல் போன்ற வரிகளை நீக்கிவிட்டு பேசுகிறார் என்பது எதைக் காட்டுகிறது? ஆர்.எஸ்.எஸ்சின் வேலை என்று இந்த நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். ஏதோ திட்டத்தோடு தான் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார். வேண்டுமென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசட்டும். தமிழ்நாடு பிடிக்காது, திராவிட மாடல் பிடிக்காது, எங்கள் தலைவர்களின் பெயரை சொல்ல பிடிக்காது ஆனால் எங்களின் வரிப்பணத்தில் வாங்கும் ஊதியம் மட்டும் பிடிக்கின்றதா? உங்களது கனவு பலிக்காது. திராவிட இயக்கம் என்பது அசைக்க முடியாத கோட்டை என்பதை மறந்து விடாதீர்கள். இதற்கான பலனை மக்கள் மன்றத்தின் மூலம் பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் வி.சி.க.மாவட்ட பொரு ளாளர் இ.காஜா மொய்தீன், வி.சி.க.மாவட்ட துணை செயலாளர் சி.காயத்ரி, தி.மு.க.நகர செயலாளர் செல்வம், தி.மு.க.வடக்கு ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், த.வா.க.மாநில அமைப்பாளர் ராஜலிங்கம், ம.ம.க. மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், கழக பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேசு, மாவட்ட செயலாளர் நீ.சேகர், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில ப.க.ஆசிரியரணி தலைவர் வா.தமிழ் பிரபாகரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி, மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மண்டல தலைவர் சி.சுப்பிரமணியம், சேலம் மாவட்ட கழக தலைவர் அ.ச. இளவழகன், மாவட்ட செயலாளர் பா.வைரம், மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டிண மூர்த்தி, மாவட்ட செயலாளர் கா.நா.பாலு உள்ளிட்ட ஏராளமான கழக பொறுப்பாளர்களும் தோழர் களும் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சி.கூத்தன் நன்றி கூறினார்.

வாழப்பாடி நகரில் நடைபெற்ற கூட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். புதிதாக ஏராளமான இளைஞர்கள் இயக்கத் தில் எழுச்சியோடு பணியாற்றுவதையும் காண முடிந்தது தனிச் சிறப்பாகும்.


No comments:

Post a Comment