28 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான புனர் வாழ்வு கட்டடம் - 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

28 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான புனர் வாழ்வு கட்டடம் - 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்


சென்னை, ஜன. 25- புனர் வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை வரும் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்க ளுக்கு அவர் அளித்த பேட்டி:

புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யம் ரூ.28.40 கோடியில் உலக வங்கி நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.  இந்த கட்டடத்தில் பயன்படுத்தி கொள்வதற்கும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் சேர்த்து ரூ.11.43 கோடியில் உபகரணங்கள் வாங் கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ.39.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகர ணங்கள் என்கிற வகை யில் பணிகள் முடிந்தள்ளது. இந்த கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வரும் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த மய்யத்தில் பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கட்டடத்தை திறந்து வைத்து செயற்கை கால்கள் தேவைப்படுகிற மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி திட்டத்தை முத லமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் சக்கர நாற்காலிகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் அரசிடம் விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் அத்திட் டத்தின்படி சக்கர நாற் காலிகள் வழங்க உள்ளார். தமிழ்நாட்டில் காப்பீட்டு திட்டம் என்பது ஏறத்தாழ 1.5 கோடியை நெருங்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவர்கின்ற வகையிலான திட்டமாக காப்பீட்டு திட்டம் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment