ஆளுநர் மாளிகை முன் ஜனவரி 20-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

ஆளுநர் மாளிகை முன் ஜனவரி 20-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு 

சென்னை, ஜன.10 ஜனவரி 20-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்று கையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக் களின் தொகுப்பு அல்ல. அரசமைப் புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப் பின் காரணமாக ஆளுநருக்கு அந்த மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, தமிழ்நாடு ஆளுநர் அமைச்சரவை தயாரித்து, ஒப்புதல் அளித்த அறிக்கையில் தானடித்த மூப்பாக சிலவற்றை தவிர்த்தும், திரித்தும் வாசித்தி ருப்பது அரசமைப்புச் சட்டப் படியும், தார்மீக நெறியின் படியும் ஏற்றுக் கொள்ள முடியாத நட வடிக்கையாகும். பெரியார், அம் பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந் தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரையும், சுயமரியாதை, பல் லுயிர் ஓம்புதல், திராவிட மாடல் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்ணு ரிமை போன்ற தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங் களையும் வாசிக்காமல் தவிர்த் திருக்கிறார். தமிழ்நாடு மாநிலம், தமிழ்நாடு அரசு ஆகிய அரச மைப்புச் சட்டத்தின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட பெயர்களையும் உச்சரிக்க மறுத்திருக்கிறார். இவை யனைத்தின் மூலம் ஆளுநர் தனது கடமையிலிருந்தும், அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலிலிருந்தும் மீறியிருக்கிறார். இதன் மூலம் ஆளுந ராக தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்திருக்கிறார்.

ஒரு அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியின் உறுப்பினர் களும் அமைதியாக கேட்டுக் கொண் டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது அவை நாகரீகமின்றி சட்டப் பேரவையை யும், அதன் மூலம் தமிழ்நாடு மக் களையும் அவமதிக்கும் வகையில் அவை மரபை மீறி ஆளுநர் வெளி யேறிச் சென்றது அவரது சகிப் பின்மையையும், நாகரீகமற்ற தன் மையையும் வெளிப் படுத்தியிருக் கிறது. இதேபோன்று  நாட்டுப் பண்ணை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார். இதுகா றும் அவைக்கு வெளியே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தமிழ் நாட்டையும், தமிழ்நாடு மக்களை யும், தமிழ்நாடு பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டி ருந்த ஆளுநர் சட்டப் பேரவைக் குள்ளேயே அவற்றை அரங்கேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

அதேசமயம், தமிழ்நாட்டின் மாண்பையும், சட்டமன்றத்தின் மாண்பையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழுஉரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்றும், ஆளுநர் திரித்துக் கூறியவை நீக்கப்படும் என்றும் உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாகவும், பாராட்டுக்குரிய தாகவும் அமைந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்திற்கு கட் டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.சின் தொண் டராக செயல்படு வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மக்களால் தேர்ந் தெடுக்கப் பட்ட அரசை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்து கொண் டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதே தனது கொள்கையாகவும் கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகி றது. அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவியை வன்மையாக கண்டிப்ப தோடு, அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டு மெனவும் வலியுறுத்தி 20.1.2023 அன்று ஆளுநர் மாளி கையை முற் றுகையிடும் போராட் டம் நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment