பீகார் கல்வியமைச்சருக்கெதிராக கொலைவெறித் தூண்டுதல்: நாக்கை அறுப்போமென சங்-பரிவாரங்கள் மிரட்டல்! ரூ. 10 கோடி சன்மானமும் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

பீகார் கல்வியமைச்சருக்கெதிராக கொலைவெறித் தூண்டுதல்: நாக்கை அறுப்போமென சங்-பரிவாரங்கள் மிரட்டல்! ரூ. 10 கோடி சன்மானமும் அறிவிப்பு!

பாட்னா, ஜன. 14 பீகார் கல்வியமைச்சரின் பேச்சை யடுத்து, வழக்கம்போல சங்-பரிவாரக் கூட்டங்கள் கொலை வெறிக் கூச்சல் போட்டுள்ளன. சந்திரசேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாவிக் குதித்துள்ளன. 

‘கடவுள் ராமர் அவமதிக்கப்பட்டால், அதை தேசம் சகித்துக் கொண்டிருக்காது. இந்த விஷயத்தில், முதலமைச்சர் நிதீஷ் குமார் அமைதி காப்பது ஏன்? சந்திரசேகரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். நம் தேசத்தின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக சந்திரசேகர்மன்னிப்பு கோர வேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்தும், 

“வாக்கு வங்கி அரசியலுக்காக, இன்னும் எத்தனை காலத் துக்கு இந்துக்கள் அவமதிக்கப்படுவார்கள்? இஸ்லாமியர்களின் 'புனித' நூலான ‘குர்ஆன்’ குறித்து கருத்து தெரிவிக்க சந்திரசேகருக்கு துணிவு உள்ளதா?” என்று ஒன்றிய அமைச்சர் கிரி ராஜ் சிங்கும் கொந்தளித்தனர். 

அயோத்தி மடாதிபதி ஜெகத்குரு பரமன்ஸ் ஆச்சாரியா  என்பவரோ, ஒருபடி தாண்டி, “அமைச்சர் சந்திரசேகர் உடனடி யாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

இது நடக்காத பட்சத்தில், சந்திரசேகரின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கிறேன்'' என்று கொலைவெறியைத் தூண்டியுள்ளார். 

காவிகள்தான் 

மன்னிப்பு கேட்க வேண்டும்

இந்நிலையில், தனது கருத்தில், தான் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் சந்திரசேகர், “உண்மை நிலையை அறியாத காவிகள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இம்மாதத் துவக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள  அமைச்சர் எம்.பி. ராஜேஷூம், மனுஸ்மிருதி ஒரு கொடூரமான ஜாதி அமைப்பை ஆதரிப்ப தாகப் பேசியிருந்தார். வர்கலா சிவகிரி மடத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேஷ், “கேரளாவுக்கு ஒரு ஆச் சாரியார் இருக்கிறார் என்றால், அது சிறீ நாராயண குருதான், ஆதி சங்கராச்சாரி யார் அல்ல” என்று கூறியிருந்தார். 

இந்நிலையிலேயே பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகரும், மனுஸ்மிருதி சமூகத்தை பிளவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment