கல்லக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பெரியார்-1000 போட்டித் தேர்வு பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

கல்லக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற்ற பெரியார்-1000 போட்டித் தேர்வு பரிசளிப்பு விழா


கல்லக்குறிச்சி, ஜன. 25- கல்லக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை நகரம், அத்தியந்தல் கிராமம், இவ்விடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பெரியார்-1000 தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு 19.12.2022 அன்று அந்தந்தப் பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்றது.

மணலூர்பேட்டை அரசினர் பெண்கள் மேனிலைப்பள்ளியில், எஸ்.பிரிய தர்சினி 42/50, டி.நந்தினி 38/50, எம். ஜெயந்தி 37/50 ஆகிய மதிப்பெண்களுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

மணலூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில், ஜீ.தேவா 32/50, கே.சசிகுமார் 30/50, இ. பெருமாள் 28/50 சி.அன்புக்குமரன் 28/50 ஆகிய மதிப் பெண்களுடன், முதல் மூன்று இடங்க ளைப் பெற்றனர்.

அத்தியந்தல் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பி.தேவ் 26/50, எஸ் சந்தோஷ் குமார் 20/50, ஜி.திலீப்குமார் 18/50 ஆகிய மதிப்பெண்களுடன், முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிந்தனைகளை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், தமிழ் நாடு அரசின் அனுமதியோடு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பெரியார்- 1000, வினா-விடை போட்டி எழுத்துத்தேர்வை நடத்தியது. 

ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன், இத்தேர்வில் கலந்து கொண்டன. ஒவ் வொரு பள்ளியிலும் மதிப்பெண் அடிப் படையில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு, "பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இலட்சினை பொருத்தப்பட்ட தங்கப் பதக்கத்தை முதல் பரிசாகவும்; வெள்ளிப்பதக்கத்தை இரண்டாம் பரிசாகவும்; வெண்கலப் பதக்கத்தை மூன்றாம் பரி சாகவும் வழங்குகிறது. தேர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்கட்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 

மேலும் இத்தேர்வை நடத்த முன்வந்த அனைத்து பள்ளிகளுக்கும் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பிரத்தியேமாகத் தயாரிக்கப்பட்ட 12" ஜ் 18" அளவுள்ள பெரியார் படமும் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம், உரிய நன்கொடையாளர்களை அணுகி, முதல் பரிசாக ரூ.5000- பணமுடிப்பும், இரண்டாம் பரிசாக ரூ.3000- பணமுடிப்பும், மூன்றாம் பரிசாக ரூ.2,000- பணமுடிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.

மணலூர்பேட்டை, அரசு பெண்கள் மேநிலைப்பள்ளியிலும், அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியிலும், அத்தியந்தல் அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும் இப் பரிசளிப்பு நிகழ்வுகளை திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவர் மு.இளங்கோவன், மணலூர்பேட்டை நகர கழகத் தலைவர் சி.அய்யனார்; நகரச் செயலாளர் பா.சக்தி, ஜம்பை கிளைக்கழகத் தலைவர் அ.தமிழரசன், செயலாளர் வை.சேகர், முருக்கம் பாடி கிளைகழகத் தலைவர் மா.கணபதி ஆகிய தோழர்கள், பள்ளித் தலைமை யாசிரியர், ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக விழாவை நடத்தினர்.

அத்தோடு, மூன்று பள்ளிகளிலும் தேர்வெழுதிய 140 மாணவ, மாணவிகளுக்கும், "அறிவு விருந்து”, ”சிந்தனையும் பகுத்தறிவும்" என்ற நூல்களை நன்கொடையாக வழங்கினார் கள். மொத்தத்தில், மூன்று பள்ளிகளிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment