புதுடில்லி, டிச. 14, முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணையை கட்ட மற்றும் வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தர விடக்கோரியும், முல்லை பெரியாறு அணையை பலப்ப டுத்த தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment